கேரள மாநிலம் மூணாறு அருகே பேருந்து டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மரத்தில் மோதி கவிழ்ந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மூணாறில் இருந்த எர்ணாகுளம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. சாக்கோச்சி என்ற பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வரும் வாகனத்திற்கு வழிவிட்டுள்ளார். எதிர்பாராதவிதமாக அப்போது டயர் வெடித்துள்ளது. நிலை தடுமாறிய பேருந்து பமரத்தில் மோதி சாலை ஓரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. […]
கேரளாவில் சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தெருநாய்க்கடியால் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கோழிக்கோட்டில் இருக்கும் அரக்கிணறில் வசிக்கும் 12 வயது சிறுவன் நூராஸ் வீட்டில் இருந்து வெளியே சைக்கிளில் கிளம்பினார். அப்போது அங்கு ஓடி வந்த தெருநாய், சிறுவனைக் கண்மூடித் தனமாக கை, கால் என எல்லா இடங்களிலும் கடித்துக் குதறியது. வெறித்தனமாக கடித்துக்குதறிய அந்த நாயிடம் இருந்து சிறுவன் […]
பிரதமர் கிசான் சம்மான் என்பது விவசாயிகளுக்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். கடந்த 2018-ம் ஆண்டு, டிசம்பர் 1 முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்தது. இதன் கீழ், விவசாயிகளுக்கு தலா ரு.2,000 என மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ 6,000 வழங்கப்படுகிறது.. இந்த திட்டத்தில் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ. 2000 செலுத்தப்படும். ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும், அதாவது ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் […]
ஆரணியில் சைவ உணவகத்தில் வாங்கப்பட்ட சாப்பாட்டில் எலியின் தலை சாப்பிட வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முரளி … பழைய பேருந்து நிலையம் அருகே பாலாஜி பவன் என்ற சைவ உணவகம் உள்ளது. இவர் வீட்டில் நிகழ்ச்சிக்காக 35 சைவ உணவகத்தில் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டரின் பேரில் நேற்று மாலை ஓட்டலில் […]
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பெரகரநாடு அருவங்காடு கிராமத்தில் வசித்து வருபவர் செல்லம். இவரது மனைவி புஷ்பா. மகன் வல்லரசு (20), பரமத்திவேலூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதல் வருடம் படித்து வந்தார். செல்லம் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் புஷ்பா, கேரளாவுக்கு எஸ்டேட்டில் கூலி வேலைக்கு சென்றுவிட்டார். வல்லரசு கல்லூரி ஹாஸ்பிடலில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்து செல்லும்போது அந்த […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு நவராத்திரியின் போது வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. இது முந்தைய ஆறு மாதங்களுக்கான AICPI குறியீட்டை அடிப்படையாகக் கொண்டது. இம்முறை, ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் இரண்டு மாத நிலுவைத் தொகையும் கிடைக்கும். ஜனவரி […]
நடிகர் விக்ரம் வீட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் பணிப்பெண் மேரியின் இல்லத் திருமணத்தில், விக்ரம் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். ரசிகர்களின் அன்பிற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கும் நட்சத்திரங்களில் முன்னிலையில் இருப்பவர் நடிகர் விக்ரம். ரசிகர்களையே குடும்ப உறவாக கருதும் விக்ரம், அவருடன் பணியாற்றும் சக ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் சுப வைபங்களிலும் கலந்துகொள்வது வழக்கம். இந்நிலையில், அவரின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். […]
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்று மாறுபாட்டின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.. […]
சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் பார்களில் மது விருந்து நடத்தக்கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கிறது. மேலும் ஹோட்டல்கள், பார்களில் நடன நிகழ்ச்சி நடத்தவும் தடை உள்ளது. இந்நிலையில் சென்னையில், பார் வசதியுடன் கூடிய தனியார் விடுதிகளில் தடையை மீறி நள்ளிரவு மது விருந்து மற்றும் அரைகுறை உடையுடன் நடன நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. சென்னை அண்ணா சாலையை ஒட்டியுள்ள ராயப்பேட்டை ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் பார் வசதிகளுடன் கூடிய […]
திருமணமான இரண்டாவது நாளிலேயே தனது காதலனுடன் இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மீனாட்சிபுரம் அருகே புது காலனியைச் சேர்ந்த 25 வயது வாலிபர் எலக்ட்ரீசினியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் போத்தனூரை சேர்ந்த பட்டதாரியான 23 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 9ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணமான 2-வது நாளில் வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமாகியுள்ளார். அவரை எங்கு தேடியும் கிடைக்காத […]