தெருநாய்களுக்கு உணவளிப்பவர்கள்தான் கடிப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞர் வி.கே.பிஜு என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”கேரளாவில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துவிட்டதாகவும், அதைக் கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கேரளாவில் நாய்க்கடியால் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அண்மையில் 12 வயது […]
அருப்புக்கோட்டை அருகே ஆயில் மில்லின் கூரையை பிரித்துக் கொண்டு அரை நிர்வாணத்தில் உள்ளே நுழைந்த திருடன் ரூ.1.75 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றான். அருப்புக்கோட்டையில் ஜோதி ஆயில் மில்ஸ் என்ற எண்ணெய் கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று நள்ளிரவு திருடன் மேற்கூரையில் ஓட்டை போட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தான். அந்த திருடன் அரை நிர்வாணத்தில் வந்து தலையை துணியால் மூடிக் கொண்டு கள்ளா பெட்டி இருக்கும் இடத்திற்கு சென்று ரூ.1.75 […]
உத்தரபிரதேசம் மாநிலம் பாலியா மாவட்டம் நாஹ்ரா கிராமத்தை சேர்ந்த ஏழு வயது சிறுமி கடந்த 5-ஆம் தேதி அவரது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். இரண்டாம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமியை அந்த பகுதியை சேர்ந்த 25 வயதான ரோகித் சவுகான் என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளார். சிறுமியை தனது வீட்டிற்கு கடத்தி சென்ற ரோகித், அங்கு வைத்து சிமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]
கன்னியாகுமாரியில் வெள்ளாங்கோடு பகுதியில் ஒரே வீட்டில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. வெள்ளாங்கோடு கரிங்க வளாகம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (52) . இவர் தனியார் வாகனம் ஓட்டி அதன் மூலம் வருமானம் ஈட்டி பிழைப்பு நடத்தி வருகின்றார். இவரது மனைவி ரஜேஸ்வரி (46) , இவர்களின் மகள் நித்யா (22). இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரின் கணவர் வெளிநாட்டில் வேலை […]
தெலுங்குத் திரையுலகின் பழம்பெரும் நடிகரும், முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பிரபாஸின் உறவினருமான கிருஷ்ணம் ராஜூ உடல்நலக்குவைறால் இன்று காலமானார். அவருக்கு வயது 82. கடந்த 1940ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணம், மொகல்தூரில் (தற்போது ஆந்திரப்பிரதேசம்) பிறந்த கிருஷ்ணம் ராஜூ, ‘Chilaka Gorinka’ என்ற திரைப்படத்தின் மூலம் 1966ஆம் ஆண்டு திரையுலகில் நுழைந்தார். அதன்பிறகு ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் வலம் வந்தார். இந்தி திரைப்படங்கள் உள்பட சுமார் 190-க்கும் […]
கிருஷ்ணகிரி அருகே அதிக வியூவ்ஸ்க்காக இளைஞர் செய்த செயலை அடுத்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது நாகிரெட்டிப் பாளையம் . இந்த ஊரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மகனான ஜனார்த்தனன் (22) தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். அதே நேரத்தில் யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டும் வருமானம் ஈட்டி வருகின்றார். இந்நிலையில் இவரது யூடியூப் சேனலுக்கு பல […]
பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே உள்ள புளிக்கீழ் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ் (36). இவரது நண்பர் பொடியாடி பகுதியில் குடியிருப்பவர் சந்தோஷ் குமார் (40). கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜேஷ், சந்தோஷ் குமாரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார். வாங்கிய பணத்துக்கு வட்டி கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் குமார் அசல் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது, பணத்தை திருப்பி கொடுக்காமல் ராஜேஷ் இழுத்தடித்துள்ளார். இதனால் […]
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் தொடர்பாக தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தார். வழக்கு நடைபெற்று வரும் நிலையில், மாணவி எழுதிய கடிதத்தில் உள்ள கையெழுத்து அவருடையது இல்லை என்பதை தடயவியல் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியிருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து முகநூல் மற்றும் […]
நெல்லை அருகே பாலருவி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்ட நிலையில் பயணம் யாரும் இல்லாததால் பெரும் பாதிப்புதவிர்க்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து பலக்காடுவரை செல்லும் பாலக்காடு விரைவு ரயில் இரு மார்க்கமாக இயக்கப்படுகின்றது. இன்று அதிகாலை பாலக்காட்டிலிருந்து பயணிகளுடன் நெல்லைக்கு பாலருவி விரைவு ரயில் 4.20 மணி அளவில் வந்தது. பின்னர் பயணிகளை இறக்கி விட்டு பராமரிப்பு பணிக்காக பணிமனைக்கு ஓட்டிச் செல்லப்பட்டது. ரயில் பரமரிப்பு பணி நடைபெறும் பணிமனையின் […]
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் ரயில் வருவதை கவனிக்காமல் ரயில்வே கேட்டை கடக்கும்போது, அதிவேகமாக வந்த ரயில், ரிக்ஷாவின் முன்பகுதியை இடித்து தூக்கி எரிந்தது. ரிக்ஷாவை இழுத்து வந்தவரும் தூக்கிவீசப்பட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் உயிர்பிழைத்த அந்த நபர், உடனடியாக எழுந்து, தூக்கிவீசப்பட்ட தனது ரிக்ஷா வண்டியை நோக்கி நடந்து சென்றார். இந்த சம்பவத்தின் வீடியோ, அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது […]