என்ஜினீயரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பித்து வந்த நிலையில், நாளை மாலையுடன் அவகாசம் முடிகிறது. மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த 12ஆம் வகுப்பு மாணவர்கள் உயர் கல்வியில் சேர கடந்த மாதம் முதல் விண்ணப்பித்து வருகின்றனர். கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 தேர்வு முடிவு தாமதம் ஆனதால், அந்த மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக […]
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகில் உள்ள வீரப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முத்துகுட்டி (50). இவர் விவசாயம் செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் முத்துகுட்டி சொந்தமாக வேன், மினி லாரி வாடகைக்கு விட்டு வருகிறார். இவருடைய மகள் ரேஷ்மா (20), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்து வந்தார். இவர்களது வீட்டுக்கு எதிர்வீட்டில் குடியிருப்பவர் மாணிக்கராஜ் (26). இவர் ஒரு கூலி தொழிலாளி. ரேஷ்மா, மாணிக்கராஜ் இரண்டு பேரும் உறவினர்கள். […]
மின்கட்டண உயர்வை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தமிழக அரசின் மின்கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் என்றும், அதைக்கண்டித்து தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, அதிமுகவினர் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாம்பரம் சண்முகம் சாலையில் மாவட்டச் செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் […]
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வருகை தரும் பிரதமர் மோடியின் பயணத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.. சர்வதேச செஸ் போட்டியான, செஸ் ஒலிம்பியாட் முதன்முறையாக சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் போட்டியில் 180-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, 2.500 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஜூலை 28-ம் தேதி, நேரு […]
ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக எந்த தொகையும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கடந்த 2 நாட்களாக பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் சில பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வீடுகளுக்கு பொறுத்தப்படும் ஸ்மார்ட் மீட்டருக்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படும் என தவறான கருத்து பகிரப்பட்டு வருகிறது. இது தவறான கருத்தாகும். சமூக ஊடகங்களில் அரசியர் தலைவர்கள் […]
குரங்கம்மை தொற்று உலகமே எதிர்பார்க்காத வேகத்தில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 75 நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வரும் சூழலில், இதுவரை குரங்கம்மை நோய் பரவாத நாடுகளிலும் பரவ தொடங்கிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பையும் தாண்டி குரங்கம்மை தொற்று அதிவேகத்தில் பரவிவருவது உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியா உடனடியாக குரங்கம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று […]
நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதற்காக 11 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒரு வார காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்க்ள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.. இதனால் மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளுமே கடந்த வாரம் முழுவதுமே முடங்கின.. இந்நிலையில் இன்று மாநிலங்களவை கூடிய போது, “ஜிஎஸ்டி வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று […]
கோவையில் தற்கொலை செய்த இறந்து போன மகன் உடலுடன் மூன்று நாட்கள் வயதான தாய் இருந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஆவாரம்பாளையம் வள்ளி நகரில் குடியிருப்பவர் சிபி சுப்பிரமணியம் (43). இவரது தாயார் வசந்தா (68). இவர் மனநலம் குன்றியவர் அதுமட்டுமல்லாமல் நடக்க முடியாமல் இருக்கிறார். சுப்பிரமணியத்துக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் சிபி சுப்பிரமணியம் தனது தாயாரை கவனித்து கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது […]
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை; மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டு அந்த இடத்தில் மண்ணின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. அதற்குள், திருவள்ளூரில் இன்னொரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்தைத் தொடர்ந்து, சேலத்தில் அரசுப் பள்ளி மாணவி இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்ட சம்பவமும், மேலும் திருப்பூரில் அரசு உதவி […]