நெல்லையை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், தனது முதல் திருமணம் மற்றும் இரண்டு குழந்தைகளை மறைத்து, இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி ஊழியரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணமான சில நாட்களிலேயே உண்மை வெளியாகி, இரண்டு கணவர்களையும் இழந்து, குழந்தைகளுடன் நிர்க்கதியாய் நின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரத்தைச் சேர்ந்த 42 வயது […]

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பல வழிகளில் மனிதர்களுக்கு உதவியாக இருந்தாலும், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சைபர் கிரைம் மோசடிகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ஒருவரின் குரலை அவருக்கே தெரியாமல் குளோனிங் செய்யும் தொழில்நுட்பம் மூலம் நடக்கும் நிதி மோசடிகள் இப்போது உச்சத்தில் உள்ளன. சமீபத்தில், ஹைதராபாத்தில் உள்ள 72 வயதான பாட்டி ஒருவர், இது போன்ற மோசடியில் சிக்கிப் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோத திமுக அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காலங்காலமாக கார்த்திகை தீபத்தின் போது தீபம் ஏற்றப்பட்டு வந்த, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும்” என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டியது அறுபடை வீடுகளில் ஒன்றான […]

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், பாஜகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசல் அதிகரித்து வருகிறது. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்ட தலைமைப் போட்டியில், பாமக தற்போது இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் ராமதாஸ் பக்கமும், இளைஞர்கள் அன்புமணி பக்கமும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் நடுநிலையில் இருக்கும் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் […]

புதிய தொழிலாளர் சட்டங்கள் பீடி மற்றும் சிகரெட் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள் நாட்டில் உள்ள பீடி மற்றும் சிகரெட் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பலன்கள் கிடைக்கவும், பணியிடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் வகை செய்கிறது. […]

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு மற்றும் உறுப்பினர் சேர்க்கை என தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த முறை தேர்தலை எதிர்கொள்ள அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சிக்குள் இழுக்கும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு எதிராகச் செயல்படும் நிர்வாகிகளை நீக்கிவரும் […]

குழந்தைத் திருமணம் இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் நாடு தழுவிய நூறு நாள் தீவிர விழிப்புணர்வு இயக்கம் டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று தொடங்கப்படுகிறது. இந்தியாவில் குழந்தைத் திருமணம் இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் நாடு தழுவிய நூறு நாள் தீவிர விழிப்புணர்வு இயக்கம் டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று தொடங்கப்படுகிறது. குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியா இயக்கத்தின் ஓராண்டு காலத்தை குறிக்கும் வகையில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த […]