இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட் (Flipkart), தனது பண்டிகைகாலச் சிறப்பு விற்பனையான ‘பிக் பில்லியன் டேஸ் சேல் 2026’ (Big Billion Days Sale) அக்டோபர் 9-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் மின்னணுப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்குப் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படவுள்ளன. விற்பனை தொடங்கும் தேதி: பொதுப் பயனர்களுக்கு அக்டோபர் 9-ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கும் நிலையில், பிளஸ் […]

மேற்கு மியான்மரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் திங்கள்கிழமை ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 36 பேர் காயமடைந்தனர். ராகைன் (Rakhine) மாநிலத்தின் கியுக்டாவ் (Kyauktaw) நகரில் உள்ள சந்தை மற்றும் அருகிலுள்ள பாலத்தின் மீது நண்பகலில் இந்தத் தாக்குதல் நடந்ததாகவும், பலி எண்ணிக்கை “மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றும் அரக்கான் ராணுவம் (Arakan Army) தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பெயரைக் கூற விரும்பாத […]

வயது அதிகரிக்கும்போது உடலில் ஏற்படும் மாற்றங்களும், சில நோய்களுக்கான ஆபத்தும் படிப்படியாக அதிகரிக்கிறது. குறிப்பாக 40 வயதை கடந்த பிறகு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிவது முக்கியமாகிறது. ஆனால், 30 வயதுகளில் இருப்பவர்கள் பலரும் எந்தவித அறிகுறிகளும் இல்லாததால் அடிப்படை உடல்நலப் பரிசோதனைகளை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. உடலில் பிரச்சினை ஏற்பட்ட பிறகே பரிசோதனை செய்வதைவிட, வயது மற்றும் தனிப்பட்ட உடல்நல […]

கருப்பை பகுதியில் தோன்றும் புற்றுநோய் செல்கள், படிப்படியாக கல்லீரல் உள்ளிட்ட தொலைதூர உறுப்புகளுக்கும் பரவும் விதம் மற்றும் அதன் அறிகுறிகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தோன்றும் முதன்மை கட்டியிலிருந்து (Primary Tumour) புற்றுநோய் செல்கள் பிரிந்து, ரத்த ஓட்டம், நிணநீர் மண்டலம் மற்றும் வயிற்று உள் சவ்வுகள் வழியாக மற்ற உறுப்புகளுக்குப் பரவுவதையே மருத்துவர்கள் ‘மெட்டாஸ்டாசிஸ்’ (Metastasis) என்கின்றனர். குறிப்பாக கருப்பை […]

படிக்கட்டுகளில் ஏறும்போதோ அல்லது வழக்கமான நடைப்பயிற்சியின்போதோ திடீரென ஏற்படும் கடுமையான மூச்சுத்திணறலை சாதாரண சோர்வு அல்லது வயது மூப்பு என அலட்சியப்படுத்தாமல், அது இதயம் மற்றும் நுரையீரல் தரும் முக்கிய எச்சரிக்கை மணி என்பதை உணர்ந்து பரிசோதிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மருத்துவ உலகில் ‘டிஸ்ப்னியா’ (Dyspnea) என்று அழைக்கப்படும் இந்த மூச்சுத்திணறலானது நுரையீரல் கோளாறுகள், ரத்தசோகை, கரோனரி தமனி அடைப்பு, இதய வால்வு கோளாறுகள் மற்றும் […]

சைவ சமய குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகரால் அமைக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் (திருப்பெருந்துறை), தமிழர்களின் ஈடுஇணையற்ற கட்டிடக்கலை மற்றும் நுணுக்கமான சிற்பக்கலைக்குத் தலைசிறந்த சான்றாக விளங்கி வருகிறது. மனிதர்களால் இது சாத்தியமே இல்லை, வேற்று கிரகவாசிகளால் மட்டுமே செதுக்கப்பட்டிருக்க முடியும் என்று வெளிநாட்டினரையே வாய் பிளக்க வைத்த பிரம்மாண்ட வரலாற்றை தன்னுள் தாங்கி நிற்கிறது இத்திருத்தலம். இக்கோவிலில் உள்ள சிலைகள் அனைத்தும் உயிருள்ள மனிதர்களை போலவே மிக […]

அரசு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக மதுரை வருகை தந்த தமிழக முதல்வர் விஜய், உலகப் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். முன்னதாக, அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளங் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்த அவர், சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி அருங்காட்சியகத்தையும் மக்கள் பயன்பாட்டிற்காக […]

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள சிக்குபோல கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் என்ற ஊமைச்சாமி (60). விவசாயியான இவர், தனது தோட்டத்து வீட்டில் மனைவி சுப்புலட்சுமி (58) மற்றும் ஏசி மெக்கானிக்காக பணிபுரியும் மகன் முத்தையா (30) ஆகியோருடன் வசித்து வந்தார். முத்தையாவுக்கும் அவரது மனைவி நந்தினிக்கும் (28) இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு நந்தினி பிரிந்து சென்றிருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்புதான் முத்தையா சமாதானம் பேசி அவரை […]

பதின்ம வயதில் பெற்ற தந்தையால் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டு, கட்டாய கருக்கலைப்புக்கு ஆளான பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர், சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு மௌனத்தை கலைத்து சட்டப் போராட்டம் மூலம் குற்றவாளியை சிறைக்கு அனுப்பியுள்ளார். 1980-களின் தொடக்கத்தில் தனக்கு 13 வயதாக இருந்தபோது தந்தை நிகழ்த்திய பாலியல் வன்கொடுமையை தாயிடம் கூறியும் குடும்பத்தினர் யாரும் அலிசனின் பேச்சை நம்பவில்லை. மாறாக, பள்ளி மைதானத்தில் மயங்கி விழுந்த அலிசனை மருத்துவரிடம் […]

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் ஈஷா சிங் 38 புள்ளிகளுடன் சீனாவின் சியாவோ ஜியாருசுவானுடன் சமநிலையில் இருந்தார். இதையடுத்து தங்கப் பதக்கத்தை தீர்மானிக்க ஷூட்-ஆஃப் நடைபெற்றது. தங்கத்துக்கான ஷூட்-ஆஃப் […]