fbpx

அகவிலைப்படி (டிஏ) திருத்தத்தின் அடுத்த கட்டத்தை மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். சமீபத்திய புதுப்பிப்பின்படி, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் டிஏ உயர்வு அறிவிப்பு வெளியாகலாம். DA உயர்வை அரசாங்கம் மறுதொடக்கம் செய்ததிலிருந்து, மத்திய ஊழியர்கள் கடந்த ஆண்டில் DA முதல் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) வரை பல உயர்வுகளைப் பெற்றுள்ளனர். எனினும் 18 மாத காலத்திற்கு DA நிலுவைக்கான நிலையான கோரிக்கை குறித்து இன்னும் எந்த செய்தியும் […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,016-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து […]

கண் பார்வையை மேம்படுத்தும் புதிய கண் சொட்டு மருந்துக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.. அமெரிக்காவின் FDA (உணவு மற்றும் மருந்து நிர்வாகம்) ஒரு புதிய வகை கண் சொட்டு மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. வயது தொடர்பான பார்வையை மேம்படுத்தும் நோக்கில் கண் சொட்டு மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் கண் பார்வை பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. Vuity என்று அழைக்கப்படும், சொட்டு […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 20,044 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 56 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 18,301 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகத்தால், சென்னை கிண்டியை தலைமையிடமாக கொண்டு நடத்தப்பட்டு வரும், மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் (CIPET) பட்டம் மற்றும் பட்டய படிப்புகளை நடத்தி வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், நுழைவுத் தேர்வு ஏதுமின்றி, நேரடி சேர்க்கை மூலம் 3 ஆண்டுகால பட்டய படிப்பை (DPMT/DPT) படிக்கலாம். இதேபோன்று, கல்லூரிகளில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தவர்கள் 2 ஆண்டு கால முதுநிலை பட்டப்படிப்பில் […]

சென்னை மாநாகராட்சி மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி இடையேயான ஒப்பந்தத்தின் கீழ், 01 ஜூலை 2022 முதல் செப்டம்பர் 30, 2022 வரை தபால்காரர் மூலம், சென்னை மாநாகராட்சி ஓய்வூதியதாரர்கள் தங்கள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழைத் தங்கள் வீட்டிலிருந்தபடியே சமர்ப்பிக்க அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக, வருடாந்திர உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிப்பதிலிருந்து  பெருநகர சென்னை மாநகராட்சி ஓய்வூதியதாரர்களுக்கு விலக்கு […]

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி தனது செய்தி குறிப்பில்;  தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள மாற்றுத்‌ திறனாளிகள்‌ நலத்திட்டங்கள்‌ மற்றும்‌ உதவி உபகரணங்கள்‌ பெறுவதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்‌ மாவட்டம்‌ முழுவதும்‌ நடைபெறவுள்ளது. காரிமங்கலம்‌ ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ காரிமங்கலம்‌ அரசு ஆண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ வருகின்ற இன்று காலை 10.00 மணி முதல்‌ மதியம்‌ 2 மணி வரை […]

தமிழகத்திற்கான தனி கல்விக் கொள்கை குறித்த கருத்துக்களை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் குழுவிற்கு தெரிவிக்கலாம் இதுகுறித்து மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் தலைவர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்திற்கான தனித்துவமான மாநில கல்விக் கொள்கை உருவாக்கிட உரிய நடவடிக்கையில் மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து தரப்பினரிடம் இருந்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்கு உயர்மட்ட குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பொதுமக்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், […]

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் மலை பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, […]

மாநில அரசின் ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், ஜூலை 1 முதல் 30 செப்டம்பர் 2022 வரை, அவர்களது வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மாநில அரசின் ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறும் 7,15,761 பேர் வருகிற ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேரில் […]