நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த லவ் டேல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டுரை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பிஜ்ஜால் என்பவர் காந்தி நகரில் வீடு கட்டி வருகிறார். இந்த இடமானது நிலச்சரிவு அபாயம் மிக்க இடம் என பலமுறை அங்கிருப்பவர்கள் புகார் கூறிய நிலையில், அந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், காலையில் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென்று அங்கிருந்த தடுப்புச் சுவரானது முழுவதுமாக இடிந்து […]

அமெரிக்கா போன்ற நாடுகளில் அவ்வப்போது வேற்றுகிரகவாசிகள் பறக்கும் தட்டுக்களில் வந்ததாகவும், அதை நேரில் பார்த்ததாகவும் திடீரென்று சிலர் திகிலை கிளப்புவார்கள். இன்று வரை யுஎப்ஓ, ஏலியன்கள் குறித்த விஷயங்கள் வெறும் வாய்வழி செய்திகளாக தான் நாம் அறிந்து வருகிறோம். பூமியை போல் வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்கின்றனரா? என்பதை அறிவதற்கான ஆய்வுகளை ஒவ்வொரு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரில் பைலட் ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற […]

பயங்கரவாத எதிர்ப்பு படை அதிகாரிகளுக்கு, இந்திய தூதரகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், பணத்திற்காக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI-க்கு, இந்தியாவைப் பற்றிய பல ரகசிய ஆதாரங்களை கசிய விடுவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரக ஊழியர் ஐஎஸ்ஐக்கு உளவு வேலை பார்த்ததாக கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதேந்திர சிவல், வெளியுறவு அமைச்சகத்தில் எம்.டி.எஸ் (மல்டி […]

கர்நாடக மாநிலத்தின் கிருஷ்ணா நதியில் இருந்து ஆயிரம் ஆண்டுகள் பழமையான விஷ்ணு மற்றும் சிவலிங்க சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் ராய்ச்சூர் மாவட்டத்தில் கிருஷ்ணா நதியின் மேல் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தக் கட்டுமான பணிகளின் போது பல நூற்றாண்டுகள் பழமையான விஷ்ணு சிலை மற்றும் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிலைகள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து தொழிலாளர்கள் இது தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் […]

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு என்றால், அது பிரதீப்புடைய வெளியேற்றம் தான். பிரதீப் ஆரம்பத்தில் இருந்து இந்த சீசனில் டைட்டில் வின்னராக வருவார் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், அவரோடு நண்பர்களாக இருந்த சில போட்டியாளர்கள் பிரதீப் பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொன்ன குற்றச்சாட்டு காரணமாக பிரதீப் தன்னுடைய தரப்பு நியாயங்களை சொல்ல விடாமல் அவருக்கு கமல்ஹாசன் ரெட் கார்டு […]

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக கூட்டணியாக இருந்த அதிமுக – பாஜக இந்த தேர்தலில் பிரிந்துள்ளது. இதையடுத்து, இரு கட்சிகளும், தங்கள் கூட்டணியை வலுப்படுத்த மற்ற கட்சிகளோடு கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளை இழுக்க பாஜகவும், அதிமுகவும் முயன்று வருவதாகத் தெரிகிறது. இந்நிலையில், மத்திய திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரும், பாஜக மூத்த […]

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் கடந்த வெள்ளிக்கிழமை தனது அரசியல் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார். மேலும் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த அவர் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டினார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் இருந்தன. இந்நிலையில் அவரது கட்சி பெயருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. விஜய் அரசியல் கட்சிக்கு தமிழக […]

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்த ரிது பஹ்ரி, உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைமை நீதிபதி ஆனார். இவர் மாநிலத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், நீதிபதி விபின் சங்கி ஓய்வு பெற்றதையடுத்து, நீதிபதி மனோஜ் திஹாரி, தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்றினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, உத்தரகாண்ட் மாநிலத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக திரு.ரிது பஹ்ரி பதவியேற்றார். ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் […]

ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் அமெரிக்காவில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தனது உயிரை காப்பாற்ற வேண்டி, அந்த மாணவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது . தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் சையத் மசாஹிர் அலி. இவர் அமெரிக்காவின் இந்தியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த இவரை […]

கோவை சேர்ந்த சர்மிளா என்ற இளம்பெண் கடந்த வருடம் தனியார் பேருந்தை இயக்கி வந்தார். பேருந்து ஓட்டுநராக இருந்த ஷர்மிளா சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானார். இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சர்மிளாவை, காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி தட்டிக்கேட்டுள்ளார். தட்டிகேட்டபோது போக்குவரத்து எஸ்.ஐ. ராஜேஸ்வரியை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக சர்மிளா மீது புகார் அளிக்கப்பட்டது. அதாவது, காந்திபுரம் அருகே போக்குவரத்து காவலரை […]