தொல்லைதரும் அழைப்புகள் மற்றும் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதால் மொபைல் ஆபரேட்டர்கள் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், ஆபரேட்டர்களுக்கு “நிதி ஊக்குவிப்பதாக” ரூ.110 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும், சைபர் குற்றவாளிகளால் பறிக்கப்பட்ட கிட்டத்தட்ட ரூ. 1,000 கோடி, கிட்டத்தட்ட நான்கு லட்சம் பயனர்கள் தங்கள் பணத்தை மீட்டெடுக்க உதவியதால், அரசாங்கத்தால் மீட்கப்பட்டுள்ளது. தொல்லைதரும் அழைப்புகள் மற்றும் மோசடியான தொலைத்தொடர்பு செயல்பாடுகளுக்கு […]

நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2022-23ல் புதிய எய்ம்ஸ் அமைப்பதற்கான எந்த திட்டமும் அரசால் அங்கீகரிக்கப்படவில்லை. தற்போது 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் முழுமையாக செயல்படுகின்றன என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பட்டியல் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை AIIMS, […]

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2020-21-ம் ஆண்டு முதல் கடந்த 3-ம் தேதி வரை 7,50,521 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மக்களவையில் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய கிராம வளர்ச்சித்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்; கிராமப்புறங்களில் அனைவருக்கும் வீட்டுவசதி என்ற நோக்கத்தில் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் கடந்த 2016 ஏப்ரல் 9-ம் தேதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2024 மார்ச் […]

பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்காக முதலமைச்சர் முக.ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டுக்கு சென்றிருந்தார். கடந்த மாதம் ஜனவரி 27ஆம் தேதி ஸ்பெயினுக்கு புறப்பட்டுச் சென்ற அவர், அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான மிகவும் சாதகமான சூழ்நிலைகளைப் பற்றி அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார். அதன் மூலம் சில நிறுவனங்கள், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. […]

வந்தே பாரத் ரயில் பயணித்த பயணிக்கு ஐஆர்சிடிசியால் வழங்கப்பட்ட உணவில் இறந்த கரப்பான் பூச்சி ஒன்று கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்.1ம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ராணி கம்லாபதியில் இருந்து ஜபல்பூர் சந்திப்புக்கு வந்தே பாரத் ரயில் சென்ற பயணி ஒருவர், இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) வழங்கிய உணவில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். டாக்டர் […]

சென்னையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் கடந்த 2ஆம் தேதி தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை, இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என தெரிவித்துள்ள விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என அறிவித்தார். விஜய்யின் இந்த அறிவிப்பால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். […]

அரசி விலையை கட்டுப்படுத்தும் நோக்கி ரூ.29க்கு மலிவு விலையில் பாரத் அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்ததையடுத்து, முதற்கட்டமாக தமிழ்நாட்டுக்கு 22,000 டன் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரிசி விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஓராண்டில் 15 சதவீதம் அதிகரித்து விட்டது. எனவே, அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக, மலிவு விலையில் அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கு ‘பாரத் அரிசி’ என்று […]

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலில் நடிகர் வடிவேலு நேற்று தரிசனம் செய்தார். வடிவேலுவின் தாயார் சரோஜினி வயது முதிர்வு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். இத்தகைய சூழலில் தாயாரின் ஆத்மா மோட்சம் அடைய வேண்டுமென வேண்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் நந்தீஸ்வரருக்கு முன்பு மோட்ச தீபம் ஏற்றினார். தரிசனம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த வடிவேலு, “எல்லாமே எனக்கு தாய் தான். தாயார் தான் எனது குடும்பத்திற்கு எல்லாமே. அவர் இறந்த […]

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் தனக்கு சொந்தமான நிலத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள கல்லை சிலர் துணியைச் சுற்றி சிலை எனக்கூறி வழிபாடு செய்து வருகின்றனர். ஆகையால், அந்தக் கல்லை அகற்ற போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சக்தி முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக புகார் அளித்தபோது, இது உரிமையியல் பிரச்சனை எனக் கூறி போலீசார் புகாரை முடித்துவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த மனு […]

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எம்.பி.யாக இருக்கவோ, அமைச்சராக இருக்கவோ தகுதியற்றவர் என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., மக்களவையில் கடுமையாக விமர்சித்தார். இதன்மூலம் ஒட்டுமொத்த தலித் சமூகத்தையும் டி.ஆர்.பாலு அவமதித்திருப்பதாக பாஜக குற்றம்சாட்டியதால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்: ஆ.ராசா (திமுக): தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. […]