கோவை விமான நிலையம் அருகே நேற்று முன் தினம் இரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் அந்த 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். […]
கர்நாடக மாநிலம் சாமராஜ நகர் மாவட்டம் கொல்லேகலில் அமைந்துள்ள ஒரு தனியார் பேச்சு மற்றும் செவிப்புலன் பள்ளியில் அரங்கேறிய கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அங்கு ஆசிரியராக பணியாற்றி வந்த ஒருவர், கடந்த 13 வருடங்களுக்கும் மேலாகப் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளால் தங்களது நிலையை வெளியில் யாரிடமும் எடுத்துச் சொல்லவோ, பேசவோ […]
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, […]
இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் தொழிலதிபரும் ஹிந்துஜா குழுமத்தின் தலைவருமான ஜி.பி. ஹிந்துஜா (GP Hinduja) இன்று காலமானார்.. அவருக்கு வயது 85. வணிக உலகில் ‘ஜி.பி.’ (GP) என அன்பாக அழைக்கப்பட்ட ஜி.பி. ஹிந்து ஜா, கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் லண்டனிலுள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த டோரி பியர் ராமி ரேஞ்சர் (Rami Ranger) […]
ChatGPT Go Free என்பது இந்தியாவில் உள்ள பயனர்களுக்காக OpenAI நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு புதிய இலவச சேவையாகும். இதன் மூலம் எந்தக் கட்டணமும் இல்லாமல் ChatGPT எனும் மேம்பட்ட AI சேட் கருவியை பயன்படுத்த முடியும். ChatGPT Go Free என்றால் என்ன? யார் இதைப் பெறலாம், எப்படிப் பெறுவது, மற்றும் கவனிக்க வேண்டிய முக்கிய நிபந்தனைகள் ஆகியவை குறித்து பார்க்கலாம்.. ChatGPT Go Free என்றால் என்ன? […]
இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளின் விசா விண்ணப்பங்களை மொத்தமாக ரத்து செய்ய அல்லது நிராகரிக்க கனடா அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதற்காக புதிய அதிகாரங்களைப் பெற கனடா அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது… இந்த நாடுகளில் இருந்து வரும் விண்ணப்பங்களில் “ஏமாற்று நடவடிக்கை (fraud) பிரச்சனைகள்” இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, இந்திய மாணவர்களின் விசா மறுப்பு விகிதம் கடந்த ஆகஸ்டில் 74% […]
வேத ஜோதிடத்தின்படி, சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது நிலையை மாற்றிக் கொள்கிறார். நவம்பர் 6, வியாழக்கிழமை பிற்பகல் 02:59 மணிக்கு, சூரியன் குருவால் ஆளப்படும் விசாக நட்சத்திரத்தில் நுழைவார். சூரியன் அந்தஸ்து, நம்பிக்கையின் கிரகமாக இருந்தாலும், குரு அறிவு, செல்வம் மற்றும் விரிவாக்கத்தின் சின்னமாகும். இந்த இரண்டு செல்வாக்கு மிக்க கிரகங்களின் சக்தியும் ஒன்றாக வருவதால், சில ராசிக்காரர்களுக்கு இது ஒரு பொற்காலத்தை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில், சூரியனின் சக்தி […]
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் மகேந்திர ரெட்டி தனது மனைவி டாக்டர் கிருத்திகா ரெட்டியை அதிகளவு மயக்க மருந்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.. கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை தொடர்பான புதிய தகவல் வெளியாகி உள்ளது.. தனது மனைவியை கொலை செய்த சில நிமிடங்களுக்குப் பிறகு தனது காதலிக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்தச் செய்தியில் […]
திமுக துணைப் பொதுச்செயலாளராக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. கடந்த ஏப்ரல் மாதம் பொன்முடி திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் திமுக துணை பொதுச்செயலாளராக அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் அறிவித்துள்ளார். திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இல. பத்மநாபன் நியமனம் […]
தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 6 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. கடந்த வாரம் மோன்தா புயல் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது.. அதன்பின்னர் மழையின் அளவு படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது.. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 6 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஆந்திர […]

