வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு விலகியதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார். அவர் அளித்த சமீபத்திய தகவல்படி, டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை இன்றிரவு (அக். 22) ஒருநாள் மட்டும் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து, காவிரி படுகை மாவட்டங்களில் மழைப்பொழிவு படிப்படியாக குறையத் தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், வட […]
பெட்ரோல், டீசல் விலைகள் உச்சத்தில் இருக்கும் இன்றைய சூழலில், எரிபொருள் தேவைப்படாத ஒரு வாகனம் குறித்த செய்தி உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. “பெட்ரோலும் வேண்டாம், டீசலும் வேண்டாம் – தண்ணீரை ஊற்றினாலே ஓடும் கார்” என்ற தலைப்பில் ஈரான் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி கசேமி வெளியிட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது காரில் தண்ணீர் நிரப்பி, அது இயங்குவதை செய்து காட்டும் அவர், “இந்த கார் […]
Praise for the heroes of Operation Sindoor.. The list of bravery awards released by the central government..!
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புதிய தோற்றத்தைக் கொண்டுவரத் தயாராகி வருகிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட பதிப்பு பஜாஜ் எலக்ட்ரிக் வாகனப் பிரிவில் மீண்டும் கவனத்தை ஈர்க்கும். இதுவரை, இந்த பிராண்ட் சேடக் மாடலை பல பதிப்புகளில் அறிமுகப்படுத்தியுள்ளது, பேட்டரி திறன் மற்றும் அம்சங்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் அவற்றைப் பிரித்துள்ளது. வாகன உற்பத்தியாளரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக, புதிய தலைமுறை சேடக் எலக்ட்ரிக் […]
AI that doesn’t leave banking work behind.. OpenAI’s new project to automate the work of junior employees..!
தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட விவசாயிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்திக்கிறார். கடந்த 16-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அன்று முதல் 3 நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. கடந்த 19-ம் தேதி மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் இருந்து திருவாரூர், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பாதிப்புகள், […]
Is there a carcinogenic chemical in the hand sanitizer we use every day? – European Union makes a shocking announcement!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே உள்ள துராப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். பெயிண்டராகப் பணிபுரியும் இவருக்கும், இவரது மனைவி பிரியாவுக்கும் (26) இரண்டு மகன்கள் உள்ளனர். சமீப காலமாக, பிரியாவின் நடத்தை மீது சிலம்பரசனுக்குச் சந்தேகம் ஏற்படவே, கணவன் – மனைவிக்குள் அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதனால் கோபமடைந்த பிரியா, பெரியபாளையம் அருகே உள்ள புதுப்பாளத்தில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்வதும், பின்னர் சமாதானமாகி கணவருடன் […]
போர்க்குற்றம் செய்தது தொடர்பான வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கனடாவில் நுழைந்தால் கைது செய்யப்படுவார் என்று பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகள், பெண்கள் ஆகியோரும் அடங்குவர். எனவே போர்க்குற்றம் செய்ததாக நெதர்லாந்து சர்வதேச கோர்ட்டில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் கடந்த ஆண்டு அவருக்கு எதிராக சர்வதேச […]

