மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், இந்தியப் புள்ளியியல் கழக மசோதா, 2025-ன் வரைவைப் பொதுமக்களின் கருத்துக்கேட்பிற்காக வெளியிட்டுள்ளது. முன்-சட்டமியற்றும் கலந்தாய்வு செயல்முறையின் ஒரு பகுதியாக அனைத்து பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துகளும் ஆலோசனைகளும் வழங்கலாம் என தெரிவித்துள்ளது. இந்தியப் புள்ளியியல் கழகம் டிசம்பர் 1931-ல் நிறுவப்பட்டது. அன்று முதல், இது இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்கக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. 2020-ல் டாக்டர் ஆர்.ஏ. […]

மத்திய அரசின் ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), அதன் சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் இருப்பை சரிபார்க்கும் முறையை எளிமையாக்கும் வகையில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், சந்தாதாரர்கள் தாங்கள் செலுத்திய மற்றும் நிறுவனம் பங்களித்த தொகையை மிக எளிமையான முறையில் தெரிந்து கொள்ளலாம். நீண்ட காலத்திற்கு பிஎஃப் கணக்கை சரிபார்க்காமல் இருந்தால், நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாமல் போகும் நிலை போன்ற சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால், […]

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட மோசமான கூட்ட நெரிசலின் காரணமாக, குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 39 பேர் உயிரிழந்த சோகச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, இன்று (ஞாயிற்றுக்கிழமை) கரூர் நகரில் முழுமையான கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தனது 3ஆம் கட்டப் பிரச்சாரத்தை […]

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், நடிகர் விஜய் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தி வரும் பிரச்சாரக் கூட்டத் தொடரின் 3ஆம் கட்டம் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடந்தது. ஆனால், கரூரில் கட்டுக்கடங்காத கூட்டத்தால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கரூர் பிரச்சாரத்துக்காக தொண்டர்களும் ரசிகர்களும், குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும், அதிகாலை முதலே திரண்டு இரவு வரை காத்திருந்தனர். விஜய்யின் பிரச்சார வாகனம் […]

தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு தேர்வாணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தெகுதி-1 மற்றும் IIA)-இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகை (OMR) தேர்வு இன்று நடைபெற உள்ளது. இத்தேர்வினை 5,53,634 (பொதுத் தமிழை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை 4,47,421 மற்றும் பொது ஆங்கிலத்தை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை 1,06,213) […]

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று (செப்.27) கரூரில் மேற்கொண்ட 3ஆம் கட்டப் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பலரும் அடங்குவர். மேலும், பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தமிழ்நாட்டு மட்டுமின்றி நாட்டையே உலுக்கியுள்ளது. 2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டுப் பல்வேறு […]

தமிழகத்தில் இன்று முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஒடிசா – சத்தீஸ்கர் […]

தற்போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால், நடுத்தர மக்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது. திருமணம் மற்றும் பண்டிகை காலங்கள் நெருங்கும் நிலையில், இந்த விலை உயர்வு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தங்கம், வெள்ளி உலோகங்களுக்குப் பிறகு, மற்றொரு அத்தியாவசிய உலோகமான தாமிரத்திற்கு (Copper) எதிர்காலத்தில் வரலாறு காணாத தேவை அதிகரித்து, அதன் விலை உயரும் என சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். உலகளவில் தாமிர […]

சளி என்பது பொதுவாக 7 நாட்கள் வரை நீடிக்கும் என்றாலும், சில அறிகுறிகள் இரண்டு வாரங்கள் வரை இருக்கக்கூடும். இதில் மோசமான அறிகுறிகள் முதல் 3 நாட்களிலேயே உச்சத்தை அடைகின்றன. மூக்கில் லேசான அரிப்பு, வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலே உடனடியாக மாத்திரை எடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த தொந்தரவுகளை விரைவாகக் கவனித்து, உடனடியாக நிவாரணம் பெறவும், விரைவில் குணமடையவும் சில எளிய வழிமுறைகள் உதவும். தேன் கலந்த […]