தவெக தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்; 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் காங்கிரஸுக்கு கூடுதல் சீட்கள் வேண்டும் என்று கட்சியினர் தங்களுடைய ஆசையை சொல்கிறார்கள். இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தாது. கட்சியினர் கருத்துகளை காங்கிரஸ் தலைமையிடம் தெரிவிப்பேன். ஆனால், முடிவு எடுப்பது காங்கிரஸ் தலைமையும், பொறுப்பாளர்களும் தான். தவெக-வுடன் கூட்டணி குறித்து காங்கிரஸ் […]

தூக்கம் என்பது நல்ல ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய அம்சம் என்று கருதப்படுகிறது. மருத்துவ சமூகம் அதன் முக்கியத்துவத்தையும், தூக்கமின்மை பல சுகாதார நிலைகளை எவ்வாறு தூண்டுகிறது என்பதையும் அடிக்கடி வெளிப்படுத்துகிறது. இந்தநிலையில், நரம்பியல் துறையில் 30+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் பிரசாந்த் கட்டகோல், செப்டம்பர் 22 அன்று இன்ஸ்டாகிராம் பதிவில், மோசமான தூக்கத்தால் மூளையில் ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். இன்றைய […]

வங்கக் கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை மேற்கு வங்கம் மற்றும் அதையொட்டிய வடக்கு ஒடிசா – வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது இன்று வலுகுறையக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் […]

2026-ல் அதிமுக ஆட்சியில் உயர்த்தப்பட்ட வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணம் குறைக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று குன்னூர் தொகுதியில் பேசிய அவர்; திமுக ஆட்சிக்கு வந்து 52 மாதம் முடிந்தது, இன்னும் 7 மாதமே இருக்கிறது. குன்னூருக்கு ஏதாவது பெரிய திட்டம் வந்திருக்கிறதா..? இதே […]

மகளிர் உரிமைத் தொகை விரைவில் கூடுதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், இதற்காக முதல்வர் திட்டமிட்டு வருவதாகவும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி; சிறப்பு முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி 60 சதவிகித மனுக்கள் வருகின்றன. மகளிர் உரிமைத்தொகை விரைவில் கூடுதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக முதல்வர் திட்டமிட்டு வருகிறார். இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி […]

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில், கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டியில் பாகிஸ்தான் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம், ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நம்பிக்கையை பாகிஸ்தான் தக்க வைத்துக் கொண்டது. 2025 ஆசியக்கோப்பை தொடரானது முக்கியமான கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. ஒரு தோல்வி கூட அடையாமல் ஒருபக்கம் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், தோல்விக்கு பிறகு வெற்றிபெற்றே ஆகவேண்டிய வாழ்வா சாவா […]

எதிர்பாராத விதமாக தனது மனைவியின் தொலைந்து போன செல்போனை மீட்டெடுக்க UPI எவ்வாறு உதவியது என்பது குறித்து ஒருவர் Reddit இல் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவு தற்போது வைரலாகியுள்ளது. அவரின் பதிவில் “இன்று நானும் என் மனைவியும் ஒரு அதிசயத்தை அனுபவித்தோம். இன்று நாங்கள் பேட்டரி ரிக்ஷாவில் ஷாப்பிங் செய்தோம். நான் ஆட்டோக்காரருக்கு பணம் கொடுத்துவிட்டுச் செல்லும்போது, ​​எப்படியோ என் மனைவி தனது செல்போனை மறந்து வைத்துவிட்டார்… அதை நாங்கள் […]

இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.. சிறந்த இயக்குனர், சிறந்த ஓலிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த நடிகர், சிறந்த இசை போன்ற பல துறைகளுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.. தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி […]

மதுரை அருகே அரசு மாணவர் விடுதியில் மாணவர் தாக்கப்பட்டதற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ மதுரை செக்கானூரணி பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் மாணவர்கள் இடையே தாக்குதல் ஏற்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த மாணவர் விடுதியில் ஆசிரியர் நியமனம் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன. அரசு […]