நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் திரைத்துறையினர் மற்றும் அரசியல் பிரபலங்களிடையே தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், நடிகர் விஜய்யுடன் ‘திருப்பாச்சி’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த நடிகர் பெஞ்சமின், கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விஜய் தமிழகத்தின் முதல்வராக உருவெடுப்பார் என்பதில் தனக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “விஜய் தொட்டதெல்லாம் வெற்றிதான். அவரது வாழ்க்கையில் தோல்வி என்பதே கிடையாது. அப்படிப்பட்ட […]

இந்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் ஜல் சக்தி அமைச்சகங்களால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஸ்வச் சர்வேக்ஷன் (Swachh Survekshan) என்ற தூய்மை ஆய்வு அறிக்கை, நகரங்கள் மற்றும் கிராமங்களின் சுகாதார நிலையை அளவிடுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த ஆய்வானது நகரங்களுக்கு இடையே தூய்மைக்கான போட்டியை உருவாக்கி, தூய்மையான இந்தியாவை நோக்கிய நகர்வை ஊக்குவிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. சுகாதார வசதிகள், கழிவு மேலாண்மை, பொது இடங்களின் தூய்மை மற்றும் […]

அனைத்துக் கட்சி கூட்டம் மக்களை திசை திருப்பும் நாடகம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாத முதல்வர் ஸ்டாலின், தற்போது மட்டும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பற்றிய கூட்டத்தை நடத்துவதில் இருந்தே தெரிகிறது இது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம். பல்லாண்டுகாலமாகத் தொடர்ந்து நடைபெறும் வாக்காளர் […]

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியை மாவட்ட பொறுப்பாளர்கள் விழிப்புடன் இருந்து கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள் வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றன. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, இது […]

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த கர்லப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவர் பத்திரப்பதிவு எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில், பழனி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்தார். அப்போது, வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. கொள்ளையர்கள் வீட்டில் புகுந்து […]

மகளிர் உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.51 கோடி பரிசுத் தொகை அறிவித்த பிசிசிஐ. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியும், லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் முன்னேறின. இதனையடுத்து நவி […]

ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினமானது, பல ஆன்மீக முக்கியத்துவங்களை கொண்டது. குறிப்பாக, சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் புனித நாளாக இது கொண்டாடப்படுகிறது. அகிலத்தின் தந்தையாக விளங்கும் சிவபெருமானின் லிங்க திருமேனி முழுவதும் சமைத்த அன்னத்தால் முழுவதுமாக மூடப்பட்டு அபிஷேகம் செய்யப்படுவது இந்த நாளின் தனிச்சிறப்பு. இந்த அன்னாபிஷேக தரிசனம் காண்பதால், ஒரே நேரத்தில் கோடி லிங்கங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இந்த அன்னம், […]