முன்கூட்டியே வங்கி கணக்கில் பி.எம் கிசான் ரூ.2000 உதவித்தொகை விடுவிப்பு…! இவர்களுக்கு மட்டும்

farmers 2025

ஜம்மு காஷ்மீரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித்திட்டத்தின் 21-வது தவணையை முன்கூட்டியே மத்திய வேளாண் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் நேற்று விடுவித்தார்.


பி.எம்.கிசான் என்பது, சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6,000 பெறும் வகையில், இந்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம், மூன்று சம தவணைகளில் நிதி உதவியை வழங்குகிறது. இந்தத் திட்டத்தை மத்திய அரசாங்கம், 2019 பிப்ரவரி 24 அன்று கொண்டு வந்தது. திட்டம் அறிவிக்கப்பட்டதின் மூலம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமான ஆதரவை வழங்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித்திட்டத்தின் 21-வது தவணையை முன்கூட்டியே மத்திய வேளாண் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் நேற்று விடுவித்தார். டெல்லியில் கிரிஷி பவனிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக இத்தவணைத் தொகை விடுவிக்கப்பட்டது.

இதன் மூலம் 85,418 பெண் விவசாயிகள் உட்பட 8.55 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு 171 கோடி ரூபாய் நேரடியாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது. இத்துடன் பிரதமரின் வேளாண் திட்டத்தின் கீழ், ஜம்மு காஷ்மீர் விவசாயிகள் ரூ.4,052 கோடி நிதியுதவி பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான், ஜம்மு காஷ்மீரில் வெள்ளப் பெருக்கு மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் மக்களுடன் மத்திய அரசு தோளோடு தோளாக உறுதுணையுடன் இருப்பதாக தெரிவித்தார்.

Vignesh

Next Post

உஷார்!. தினசரி உணவுகளில் மறைந்திருக்கும் சர்க்கரை!. தெரியாமல் சாப்பிட்டால் இந்த நோய் வரும்..!! கேன்சர் நிபுணர் எச்சரிக்கை!.

Wed Oct 8 , 2025
உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் இந்த காலக்கட்டத்தில், பலர் தங்கள் சர்க்கரை உட்கொள்ளலைக் கண்காணிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர், குறிப்பாக உணவில் சேர்க்கப்படும் சர்க்கரைகள் உடல் பருமன், நீரிழிவு மற்றும் இருதய நோய் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சர்க்கரை நுகர்வை நிர்வகிப்பதில் மிக முக்கியமான தடைகளில் ஒன்று, அன்றாட உணவுகளில் காணப்படும் மறைக்கப்பட்ட சர்க்கரைகளை அடையாளம் காண்பது, அவை பெரும்பாலும் வெவ்வேறு பெயர்கள் அல்லது […]
sugar

You May Like