ராமர் கோவில்: ‘நான் ராமனிடம் மன்னிப்பு கேட்கிறேன் ஏனென்றால்…’, பிரான் பிரதிஷ்டைக்குப் பிறகு பிரதமர் மோடி | சிறந்த மேற்கோள்கள்.!

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வான ராமர் கோவில் கும்பாபிஷேகம் அயோத்தி நகரில் இன்று சிறப்பாக நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமை ஏற்று பிரதிஷ்டை செய்ய கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த விழாவிற்கு பின் பேசிய பிரதமர் மோடி ஸ்ரீ ராமரின் ஆலயம் இந்திய சமுதாயத்தில் அமைதி பொறுமை மற்றும் நல்லிணக்கத்தின் சின்னமாக விளங்கும் என தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து விரிவாக பேசிய பிரதமர் மோடி ” இந்த மகிழ்ச்சி மிக்க தருணம் நமக்கு வெற்றியை மட்டும் எடுத்துக்காட்டுவதாக அமையவில்லை அடக்கம் மற்றும் பொறுமை ஆகியவற்றையும் கற்றுத் தருகிறது. சில சமயங்களில் மக்கள் ராமர் கோவில் கட்டுவது தீ வைப்பதற்கு சமம் என தெரிவித்தனர். ஆனால் தற்போது ராமர் கோவில் கட்டி விட்டோம் கும்பாபிஷேக நிகழ்வும் சிறப்பாக முடிவடைந்து விட்டது. நமது ராமர் கோவில் பொறுமை அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் சின்னமாக விளங்குகிறது. ராமர் கோவில் கட்டினால் பெரும் அழிவு ஏற்படும் என்று கூறியவர்களை தற்போது காண முடியவில்லை. ஸ்ரீராமர் நெருப்பு அல்ல அவர் சக்தி எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி ” நம்முடைய ஸ்ரீராமர் அவரது இல்லத்திற்கு இன்று வருகை புரிந்திருக்கிறார் பல நூற்றாண்டுகள் வனவாசத்திற்கு பிறகு தற்போது தான் வீடு திரும்பி இருக்கிறார். இத்தனை நூற்றாண்டு காலமும் அவர் கடைப்பிடித்த பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை நமக்கு மிகப்பெரிய பாடமாக அமைந்திருக்கிறது. ஸ்ரீராமரின் பொறுமை சகிப்புத்தன்மை மற்றும் தவம் தான் அவரை ராம் மந்திர்க்கு அழைத்து வந்திருக்கிறது” என தெரிவித்தார். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது 2019 ஆம் வருடம் ராமஜென்ம பூமி தொடர்பாக தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் நன்றியை தெரிவித்தார். ராமஜென்ம பூமி நீண்ட கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு நமக்கு கிடைத்திருக்கிறது. இந்த வழக்கில் நியாயமாக தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர் ” ராமர் கோவில் நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு நீதியின் படி கட்டப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக நடைபெற்ற சட்டப் போராட்டத்தில் ராமஜென்ம பூமிக்கு வெற்றி கிடைத்தது. இந்த வழக்கில் நியாயமாக தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் பக்கத்தில் ஸ்ரீராமரிடம் பெற்று இருக்கிறார். இன்றைய நாளின் விடியல் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைகிறது. இந்திய வரலாற்றில் இன்று புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருக்கிறது” எனவும் தெரிவித்தார்.

“”இனி ராம் லாலா கூடாரங்களில் வாழ வேண்டிய தேவை இருக்காது. அவருக்காக கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்டமான புனித ஆலயத்தில் வாழ்வார். இங்கு நடைபெற்ற இந்த புனிதமிக்க விழா உலகத்தின் ஒவ்வொரு மூலையில் இருக்கும் ஸ்ரீ ராம பக்தர்களுக்கும் தெய்வீக உணர்வை தந்து இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இங்கு நடைபெற்ற நிகழ்வு மற்றும் இந்த தருணம் புனிதமான ஒன்று” என தெரிவித்தார் பிரதமர் மோடி.

கடந்த 11 நாட்கள் அனுஷ்டானத்தை பற்றி பேசிய மோடி ” சாகர் நதி முதல் சரயு வரை பயணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒவ்வொரு பகுதியிலும் ஸ்ரீராமரின் பண்டிகைக்கான உணர்வுகளை மக்களிடம் காண முடிந்தது” என தெரிவித்திருக்கிறார்.

ராமர் கோவில் கட்டுமான பணிகளில் காலதாமதம் ஏற்பட்டதற்காக பகவான் ஸ்ரீ ராமரிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக பேசிய அவர் ” பல நூற்றாண்டுகளாக ராமர் கோவில் கட்டுவதற்கு நாம் தாமதப்படுத்தி வந்தோம் . நமது முயற்சி மற்றும் தவத்தில் சில குறைகள் இருந்திருக்கிறது. இதற்காக ஸ்ரீ ராமரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்போது கோவில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் முடிந்து விட்டது. இனி ஸ்ரீ ராமர் நம்மை மன்னித்து விடுவார்” என தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீராமர் குறித்து பேசிய பிரதமர் மோடி ” ராமர் கோவில் தேசிய நலன் மற்றும் அக்கறையுடன் கட்டப்பட்டிருக்கிறது. ஸ்ரீ ராமர் தான் இந்த தேசத்தின் நம்பிக்கை. அவர்தான் நம் நாட்டின் அடிப்படை. ராமர் இந்தியாவின் பெருமை. ஸ்ரீ ராமர் தான் இந்தியாவின் சட்டம். அவர்தான் இந்த தேசத்தின் கவுரவம். அவரது திருப்திக்காக தான் இந்த கோவில் கட்டப்பட்டிருக்கிறது. ஸ்ரீ ராமர் திருப்தி அடைந்தால் அதன் விளைவுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு பலன் தரக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு இன்று அயோத்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோவிலில் நடந்து முடிந்திருக்கிறது. பிரதமர் மோடி தலைமை ஏற்று நடத்திய இந்த நிகழ்வில் 7,000 க்கும் அதிகமான விருந்தினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு ஸ்ரீ ராமரின் ஆசியை பெற்றனர். ராமர் கோவில் நிகழ்வு இந்திய வரலாற்றில் புதிய சகாப்தத்தின் தொடக்கம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். இந்த நிகழ்விற்காக நாட்டின் அரசு அலுவலகங்கள் மற்றும் மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Post

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16-வது முறையாக நீட்டிப்பு..!! நீதிபதி அல்லி உத்தரவு..!!

Mon Jan 22 , 2024
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 16-வது முறையாக நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத்துறையால் சென்னை முதன்மை […]

You May Like