Rahul Gandhi: கோடீஸ்வரர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்த பிரதமர் மோடி…!

வெகு சில கோடீஸ்வரர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்தார் பிரதமர் மோடி. இந்த தொகையை வைத்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 24 ஆண்டுகளுக்கு செயல்படுத்தி இருக்கலாம் என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள 70 கோடி மக்களிடம் இருக்கும் அதே அளவு பணம், வெறும் 22 பெரும் பணக்காரர்களிடம் இருக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை வேண்டும் என நமது விவசாயிகள் கேட்கிறார்கள். வேலைவாய்ப்பு வேண்டும் என நமது இளைஞர்கள் கேட்கிறார்கள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என நமது பெண்கள் கேட்கிறார்கள். ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலையை கேட்கும் விவசாயிகளை பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதிகள் என்கிறார்.

அதே போல, வெகு சில கோடீஸ்வரர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்தார் பிரதமர் மோடி. இந்த தொகையை வைத்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 24 ஆண்டுகளுக்கு செயல்படுத்தி இருக்கலாம். காங்கிரஸின் திட்டங்களுக்கு எங்கிருந்து பணம் வரும் என கேட்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது. ‘நண்பர்களுக்கு பாசம்’ காட்டியது போதும். சாமானிய மக்களுக்காக அரசு கஜானாவை திறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஊடகங்கள் வெறும் 15 முதல் 20 பேரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவர்கள் இரவும் பகலும் நரேந்திர மோடியை புகழ்ந்து பாடுகிறார்கள். ஊடகங்களில் 24 மணி நேரமும் நரேந்திர மோடியின் முகத்தை நீங்கள் பார்ப்பீர்கள் என்றார்.

Vignesh

Next Post

வெளியாகும் அதிர்ச்சி காரணங்கள்: 2018ல் காலாவதியான வாகனச் சான்றிதழ்..! குடித்துவிட்டு பேருந்தை இயக்கிய டிரைவர்..! 6 மாணவர்கள் பலி..!

Fri Apr 12 , 2024
Accident: ஹரியானா மாநிலத்தில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளிப்பேருந்து விபத்துள்ளானதில் 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் மகேந்திரகர் மாவட்டத்தில் GRL பப்ளிக் என்ற பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் பேருந்து ஒன்று, நேற்று 40 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி சென்றுள்ளது. நாடு முழுக்க ரம்ஜான் பொதுவிடுமுறை அமலில் உள்ள நிலையில், இப்பள்ளி மட்டும் செயல்பட்டுள்ளது. சுமார் 40 குழந்தைகள் பேருந்தில் பயணித்துள்ளனர். […]

You May Like