வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் “நிதி உங்கள் அருகில்” மற்றும் “சுவிதா சமகம்” குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை மண்டலத்துக்குட்பட்ட 6 மாவட்டங்களில் “நிதி உங்கள் அருகில்” மற்றும் இ.எஸ்.ஐ.சி -சுவிதா சமகம் இணைந்து 2025 ஆகஸ்ட் 28 அன்று காலை 9.00 மணிக்கு குறைதீர்க்கும் முகாமை நடத்துகின்றன.
வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள். சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்குப் பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப். டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்சனைகளுக்கும், இ.எஸ்.ஐ.சி பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் பங்கேற்போர் தங்கள் குறைகளுக்கு தீர்வு காண t.ly/nPTt என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்த பின்னர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கலாம். மதுரை, சிவகங்கை ராமநாதபுரம் தேனி விருதுநகர் திண்டுக்கல் ஆகிய மாவட்டத்தில் முகாம் நடைபெற உள்ளது.