அமெரிக்கா (குவால்காம்) நிறுவனத்தில் அதிரடி ஆட்குறைப்பு..! இந்தியாவில் 1,000 ஊழியர்களுக்கு வேலை பறிபோகும் அபாயம்!

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான குவால்காம் (Qualcomm), தனது பணியாளர் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த நடவடிக்கையின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளதால், இங்கு பணியாற்றும் ஏராளமான ஊழியர்கள் கவலையடைந்துள்ளனர்.


இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றான பெங்களூருவில் செயல்பட்டு வரும் குவால்காம் அலுவலகத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் 9-ம் தேதி முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. நிறுவனத்தின் இந்த முடிவால் இந்தியாவில் பணியாற்றும் சுமார் 1,000 ஊழியர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் மற்றும் நீண்டகாலமாக நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. குவால்காம் நிறுவனம் இந்தியாவில் சுமார் 20 ஆயிரம் ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது. பெங்களூரு மட்டுமின்றி சென்னை, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் அதன் அலுவலகங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள மொத்த பணியாளர்களில் சுமார் 5 முதல் 6 சதவீதம் பேர் தற்போதைய ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணியிலிருந்து நீக்கப்படும் ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான சில தகவல்களும் வெளியாகியுள்ளன. அதன்படி, மூன்று மாதச் சம்பளத்திற்கு இணையான தொகை வழங்கப்படலாம் என்றும், நிறுவனத்தில் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டுக்கும் கூடுதலாக ஒரு மாதச் சம்பளம் கணக்கிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிவிலகல் தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திடும் ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு மாதச் சம்பளம் வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இருப்பினும், இழப்பீடு தொடர்பான விவரங்களுக்கு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

ALSO READ:என்ன பண்ணாலும் இந்தக் கரப்பான் பூச்சித் தொல்லை போகவே மாட்டேங்குதா? அப்போ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

maha

Next Post

மேகதாது அணை விவகாரம்: டி.கே. சிவக்குமாருக்கு ரவி பச்சமுத்து கடும் கண்டனம்..!

Thu Nov 12 , 2026
சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதல்-அமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்த கருத்துகளுக்கு இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நீர்ப்பங்கீட்டு உரிமைகளைப் புறக்கணிக்கும் வகையில் அவரது கருத்துகள் அமைந்துள்ளதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு […]
Kaveri 2026

You May Like