நிதி ஒதுக்குவதில் விதிமுறை…! குழந்தைகளின் நலனில் மத்திய அரசு விளையாட வேண்டாம்…! அமைச்சர் அன்பில் கருத்து..!

Anbil 2025

கல்விக்கான நிதியை ஒதுக்குவதில் பல்வேறு விதிமுறைகள் வகுத்து குழந்தைகளின் நலனில் மத்திய அரசு விளையாட வேண்டாம் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.


சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; நடப்பு கல்வியாண்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுவிட்டன. மீதமுள்ள பணிகளும் டிசம்பருக்குள் முடிக்கப்படும். 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான நிதியை தான் தற்போது மத்திய அரசு வழங்கியுள்ளது. பொதுவாகவே மத்திய அரசு நிதியை தாமதமாகவே வழங்கும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாகவே பல்வேறு காரணங்களை கூறி நிதியை வழங்காமல் இருக்கின்றனர்.

அதையும் கடந்து துறைசார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதேநேரம் இந்த ஆண்டு வரவேண்டிய நிதி இன்னும் வராமல் இருப்பதால் ஒரு குழப்பமான நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றால் அவர்களுக்கு ஏற்ற தீர்ப்பு வராது என்று தெரிந்துகொண்டு தற்போது நிதியை விடுவித்துள்ளனர்.

நிதியை ஒதுக்குவதில் பல்வேறு விதிமுறைகள் வகுத்து குழந்தைகளின் எதிர்காலத்தில் மத்திய அரசு விளையாட வேண்டாம். ஆர்டிஇ மூலம் கடந்த கல்வியாண்டில் இணைந்த மாணவர்களிடம் பெற்ற கல்விக் கட்டணத்தை மீண்டும் பெற்றோர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என தனியார் பள்ளிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

Vignesh

Next Post

பெருமாளுக்கு எண்ணெய்யில் அபிஷேகம்.. அருமருந்து..!! இதன் சிறப்பு என்ன தெரியுமா..? சனிக்கிழமை இந்த கோயிலுக்கு போங்க..!!

Wed Oct 8 , 2025
தென் தமிழகத்தின் மிக முக்கியமான புனித தலமாகவும், 108 திவ்ய தேசங்களில் 48-வது தலமாகவும் விளங்குவது நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அமைந்துள்ள வானமாமலை பெருமாள் திருக்கோவில் ஆகும். ‘ஸ்ரீவரமங்கை நகர்’, ‘தோத்தாத்ரி சேத்திரம்’ மற்றும் ‘நாகணை சேரி’ எனப் பல பெயர்களால் அறியப்படும் இக்கோவிலின் முதன்மை தெய்வம் வானமாமலை தோத்தாத்திரி நாதர் ஆவார். உற்சவர் தெய்வநாயகப் பெருமாள். பழம்பெரும் புராணங்களான பிரம்மாண்டம், ஸ்கந்தம், நரசிம்மம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தத் தலம், […]
Perumal 2025

You May Like