விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா தொடர்ந்த வழக்கு.. ஜூன் 15 ஆம் தேதி ஒத்திவைப்பு..!

Vijay Sangeetha 2026

தவெக தலைவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா தொடர்ந்த வழக்கு விசாரணை ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.


விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்று சங்கீதா குற்றம்சாட்டியிருந்தார்.. அந்த நடிகையுடன் அடிக்கடி வெளி நாடுகளுக்கு சென்று வருவதாகவும், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அந்த நடிகை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் விவாகரத்து வழக்கு முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க விஜய் அனுமதிக்க வேண்டும் என்றும் தனக்கும் பிள்ளைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் புதிய மனு ஒன்றையும் சங்கீதா தாக்கல் செய்திருந்தார். இரு தரப்பு வழக்கறிஞர்களும் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இருவரும் பரஸ்பரம் பிரிந்து விடுவது என சுமூக முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வாழ்நாள் ஜீவனாம்சம், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான சொத்து பாகப்பிரிவினைகள் குறித்தும் ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வரும் ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் தவெக தலைவர் விஜய் நீதிமன்றத்தில் ஆஜராவார் என வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Read more: புஷ்பா 2 திரைப்படத்தை பின்னுக்குத் தள்ளி பாக்ஸ் ஆபீஸில் ராஜாவான துரந்தர் 2.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..?

English Summary

Sangeeta’s divorce case from Vijay postponed to June 15th!

Next Post

உதயநிதி ஸ்டாலினால் ஒரங்கட்டப்படும் சீனியர்கள்.. திமுகவில் மீண்டும் எழும் வாரிசு அரசியல் விவாதம்! - ஓர் விரிவான பார்வை..

Mon Apr 20 , 2026
Udhayanidhi Stalin's political rise: A succession political debate erupts within DMK inner circle!
Udhayanidhi Stalin 2025

You May Like