பரபரப்பு…! 13 நாட்களாக போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் கைது…!

chennai protest 2025

சென்னையில் கடந்த 13 நாட்களாக போராட்டம் மேற்கொண்ட தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.


சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 பகுதிகளுக்கான தூய்மைப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இரண்டு மண்டல தூய்மைப் பணியாளர்களில் என்யூஎல்எம் பிரிவைச் சேர்ந்தவர்கள் கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் மேற்கொண்டனர். தூய்மைப் பணியாளர்களுடன் அரசு தரப்பு மேற்கொண்ட பல சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறித்து போராடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை அடுத்து போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை கலைந்து செல்லுமாறு காவல் துறை புதன்கிழமை மாலை அறிவுறுத்தியது.

இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டத்தை அங்கு தொடர்ந்தனர். சுதந்திர தினம் நெருங்குகின்ற சூழலில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் தங்களது கையில் தேசிய கொடியை ஏந்தி இருந்தனர். இந்த சூழலில் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

Vignesh

Next Post

சனி தோஷத்தால் அவதியா..? நீங்கள் செல்ல வேண்டிய கோவில் இதுதான்..!!

Thu Aug 14 , 2025
Are you suffering from Saturn Dosha? This is the temple you should visit..!!
thirunallar 1 1

You May Like