மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் ஆடிப்பூரம் விழாவையொட்டி இன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இரு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது.
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா 26-ம் தேதி சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி 26-ம் தேதி மங்கள இசையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பங்காரு அடிகளாரின் உருவ சிலைக்கும், ஆதிபராசக்தி அன்னைக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
மேலும் 27-ம் தேதி காலை 8.30 மணிக்கு சித்தர் பீடத்திற்கு வருகை புரியும் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு சிறப்பான வரவேற்பை கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் அளித்தனர். தொடர்ந்து ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் அன்பழகன் சித்தர் பீடம் வரும் கஞ்சி கலயங்களை வரவேற்கிறார். இன்று இறுதி விழா நடைபெற உள்ளது.