தொடர் கனமழை…! 6 மாவட்டத்தில் இன்று பள்ளிகள் விடுமுறை…! முழு விவரம் இதோ

rain school holiday

சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல செங்கல்பட்டு மாவட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.


தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 5.30 மணியளவில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்தது. தொடர்ந்து சென்னைக்கு கிழக்கு – தென் கிழக்கே சுமார் 40 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு வடகிழக்கே 120 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது. இது தென்மேற்கு திசையில் வடதமிழகம் – புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுகுறையக் கூடும். மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறையும்.

இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல செங்கல்பட்டு மாவட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, திருவண்ணாமலை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அதிமுகவில் இணைப்பு... டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்க ஓ.பி.எஸ் திட்டம்...!

Wed Dec 3 , 2025
கொச்சியில் இருந்து நேற்று சென்றுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவின் முக்கிய பொறுப்பாளர்கள் சிலரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி, அதிமுக உரிமை மீட்புக்குழுவைத் தொடங்கி நிர்வாகிகளை நியமித்து வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தரப்பு ஒத்துழைக்காததாலும், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த போது சந்திக்க இயலாத காரணத்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த […]
ops 2026

You May Like