fbpx

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மறு கூட்டில் வேண்டி விண்ணப்பித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் 27-ம் தேதி மதியம் வெளியிடப்படுகிறது என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு தேர்வுத் துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொது தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு …

கடலூர் எஸ்.பி. அலுவலகம் அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரின் மனைவியை கொடூரக் கொலை செய்து நகைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழ்காங்கேயன்குப்பத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சதாசிவம். இவரது மனைவி மலர்க்கொடி. இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். …

அனைவரும் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று 32-வது சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கொரோனா தொற்றால் மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். பலர் உயிரிழந்துள்ளனர். எனவே, தடுப்பூசி போட்டுக் கொள்வதே …

இந்த தொழில்நுட்ப யுகத்தில் நாம் பெரும்பாலும் அனைத்து வேலைகளுக்குமே ஸ்மார்ட்போன்களையே நம்பி உள்ளோம்.. அந்த வகையில் ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கூகுள் பிளேஸ்டோர் மட்டுமின்றி தெரியாத தளங்களில் இருந்து அடிக்கடி செயலிகளை பதிவிறக்கம் செய்கிறார்கள். அதில் உள்ள செயலிகள் பல தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடும் என்பதாலும், ஹேக்கர்கள் சைபர் கிரைம் மோசடியில் …

ஒருபுறம் கொரோனா வைரஸ் மறுபுறம் குரங்கு அம்மை என கேரள மாநிலம் பல்வேறு நோய்களை எதிர்த்து போராடி வரும் சூழலில் தக்காளி காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.. அம்மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் இந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதன் …

சுற்றுச்சூழலை பாதிக்கின்ற தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்களின்‌ பயன்பாட்டினை தவிர்க்கும்‌ வகையில்‌ தமிழக அரசு சார்பில் பொதுமக்கள்‌, வணிக நிறுவனங்கள்‌ மற்றும்‌ விநியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள்‌ வழங்கப்பட்டும்‌, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டும்‌ தீவிர நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின்‌ அறிவுறுத்தல்களை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்களை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து அப்பொருட்களை பறிமுதல்‌ செய்து அபராதம்‌ விதிக்கவும்‌. …

ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் 31 நிலையங்களை அமைப்பதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.  ஐந்து …

ஒரு வீட்டில் திருடிய திருடனை இறந்த கொசுவின் ரத்தம் மூலம் புலனாய்வு செய்து போலீசார் கைது செய்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.

ஒவ்வொரு குற்ற சம்பவங்களின்போது குற்றத்தில் ஈடுபட்ட நபர் ஏதாவது ஒரு தடயத்தை விட்டு செல்வார் என்பது போலீசாரின் நம்பிக்கையாகும். எவ்வளவு தான் சிறப்பாக சிந்தித்து குற்றங்களில் ஈடுபட்டாலும் கூட போலீசார் தடயங்களை சேகரித்து …

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் குழு மேல் குழு அமைத்து எந்த பயனுமில்லை என்றும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகம் தாக்குதலில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த அதிமுகவைச் சேர்ந்த 14 பேர் ஜாமீனில் இன்று வெளியே வந்தனர். அவர்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்சியினருடன் …

கிராம சபை கூட்டங்கள் நடத்துவதற்கு செலவின வரம்பினை ரூ.1,000 லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியதாவது;  கிராம சபையினை நடத்த, கிராம ஊராட்சியின் அனுமதியின்படி, ஊராட்சி நிதியிலிருந்து, அதிகபட்சமாக ரூ.1000 செலவு செய்ய கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு அனுமதியிருந்தது. 2022-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு …