“என் ஆசைக்கு இணங்க வேண்டும்”.. த.வெ.க நிர்வாகி மீது பெண் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

WhatsApp Image 2026 10 21 at 10.46.06 PM 1

குடும்பத்தைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் அரக்கோணம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சசிகுமார் மீது 38 வயதுப் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கட்சியில் தனக்கு நல்ல பதவி வாங்கித் தருவதாகக் கூறி, தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட சசிகுமார் கட்டாயப்படுத்தியதாக அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். அவரது விருப்பத்துக்கு இணங்க மறுத்தால் குடும்பத்தினரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும், தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு தான் கர்ப்பமானதாகவும், இதுகுறித்து சசிகுமாரிடம் தெரிவித்தபோது அவர் மிரட்டியதாகவும் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். அச்சத்தின் காரணமாகத் தனக்குக் கருச்சிதைவு ஏற்பட்டதாகவும், அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

அரக்கோணம் அருகேயுள்ள வடமாம்பாக்கம் மங்கம்மாபேட்டையைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு மகள்கள் உள்ளனர்; அவரது கணவர் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இருக்கும் தனக்கும், சசிகுமாருக்கும் கட்சிப் பணிகள் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 16-ம் தேதி கட்சிப் பணிகள் குறித்துப் பேசுவதற்காகத் தனது வீட்டுக்கு வந்த சசிகுமார், தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கூறி, அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மகளிர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: நகைக்காக செவிலியருக்கு நேர்ந்த கொடூரம்.. சக ஊழியரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

Saranya

Next Post

கைலாசாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்! ஆசி வழங்கிய நித்யானந்தா! வெடித்த அரசியல் சர்ச்சை!

Thu Oct 22 , 2026
புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் பகுதியில் அமைந்துள்ள கைலாசா ஆதீன ஆசிரம வளாகத்தில், நவராத்திரி கொலு மற்றும் ஆயுத பூஜை விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆன்மிக விழாவில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். கைலாசாவில் இருந்து காணொளி நேரலை வழியாக நித்யானந்தா திடீரெனத் தோன்றி உரையாற்றினார். அப்போது அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் எம்எல்ஏ மோகன்தாஸ் […]
Nithyanantha 2026

You May Like