கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் மணலோடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (23). இவர் அம்ருதா (18) என்பவரை இரண்டு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அம்ருதாவின் குடும்பத்தினருக்கு ராஜேஸை தங்கள் மகள் திருமணம் செய்ததில் விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் நன்றாக சென்ற குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை உருவாக தொடங்கியது.
இருவருக்கும் இடையே அடிக்கடி தகறாரு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்ருதா கடந்த சில நாட்களாக தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ராஜேஷ் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகியது. மூன்று நாட்களுக்குப் பிறகு மனைவி வீடு திரும்பியபோது, கணவர் ராஜேஷ் வீட்டில் தூக்கில் தொங்கியபடி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அம்ருதாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த ராஜேஷின் தாயார் உடலை கீழே இறக்கி சோபாவில் வைத்தார். பின்னர், ராஜேஷின் தாய் அண்டை வீட்டாரை அழைக்க சென்று விட்டார்.
இதனிடையே அம்ருதா, அதே கயிற்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்குள் வந்த உறவினர் சோபாவில் ராஜேஸ் சடலத்தையும், தூக்கில் தொங்கியபடி இருந்த அம்ருதாவின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி நிலம்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணம் ஆன இரண்டே மாதத்தில் குடும்ப பிரச்சனை காரணம்காக தம்பதியினர் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: Wow! இந்தியாவுக்கு மீண்டும் ஜாக்பாட்.. டன் கணக்கில் குவிந்து கிடக்கும் தங்கம்.. எங்கு தெரியுமா?