ஆந்திராவில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளியாகியுள்ளது. ஒரு பெண் ஒரு ஆணிடம் தெலுங்கி ஆபாச வார்த்தைகளால் திட்டி, பின்னர் அவரை தனது செருப்பால் பலமுறை அடித்துள்ளார்.. அந்த பெண் ஆந்திர அரசுப் பேருந்தின் ஒரு சீட்டில் தனது துப்பாட்டாவை போட்டுள்ளார்.. ஆனால் அந்த சீட்டில் ஒரு ஆண் உட்கார்ந்துவிட்டதார்.. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், அந்த நபரை கடுமையாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. தேதி குறிப்பிடப்படாத சம்பவத்தின் வீடியோ வெளியாகி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சக பயணி ஒருவர் பதிவு செய்த 7 நிமிடம், 11 வினாடிகள் கொண்ட வீடியோவில், அந்தப் பெண் அந்த ஆணுக்கு அருகில் நின்று, அவரை மோசமான வார்த்தைகளால் திட்டுவதை பார்க்கமுடிகிறது.. “நீ ஏன் என் இருக்கையில் அமர்ந்திருக்கிறாய்? நீ யார்? உனக்கு வெட்கமே இல்லையா?” என்று அப்பெண் கத்துகிறார்.. அந்த ஆண் பதிலளிக்கும் போது, அப்பெண் அவரை அடித்து, மீண்டும் மீண்டும் தலையில் அடிக்கத் தொடங்குகிறார். மற்ற பெண் பயணிகள் தலையிட்டு அப்பெண்ணை அமைதிப்படுத்த முயற்சிக்கிறார்கள், ஆனால் அவர்களால் அப்பெண்ணை சமாதானப்படுத்த முடியவில்லை..
பின்னர் அந்த நபர் தனது செருப்பை கழற்றுகிறார்.. பின்னர். இருவரும் தங்கள் செருப்புகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கிறார்கள்.
வைரல் வீடியோ இந்த லிங்கில் உள்ளது : https://twitter.com/TeluguScribe/status/1961370944066523353
APS RTC లో సీట్ పై చున్నీ వేస్తె అది ఏమైనా రిజర్వేషన్ ఆ?
— 𝐒𝐫𝐢𝐧𝐢𝐯𝐚𝐬 (@ChowForYSJ) August 29, 2025
పబ్లిక్ ప్రాపర్టీ లో అతను ప్రయాణించడానికి హక్కుంది,అతను లేడీస్ రిజర్వు సీట్స్ లో కూడా కూర్చున్నట్టు లేదు
ఏది ఏమైనా భూతులు తిడుతూ అతనిపై దాడి చేయండి అనేది సరియైన చర్య కాదు @apsrtc వారు ఆ మహిళపై సత్వర చర్యలు తీసుకోవాలి
இந்த வைரல் வீடியோ குறித்து இணையவாசிகள் தங்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.. பயனர்களில் ஒருவர், “APSRTC பேருந்துகளில், ஒரு இருக்கையில் துப்பட்டாவை வைப்பது முன்பதிவுக்குக் காரணமா? பொதுப் போக்குவரத்தில் பயணிக்க ஆணுக்கு முழு உரிமை உண்டு, மேலும் அவர் பெண்களுக்கான முன்பதிவு இருக்கையில் அமர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. சூழ்நிலை எதுவாக இருந்தாலும், அவரை வாய்மொழியாகத் துஷ்பிரயோகம் செய்வதும், உடல் ரீதியாகத் தாக்குவதும் சரியான நடவடிக்கை அல்ல. ஆந்திர அரசு போக்குவரத்துக் கழகம் அந்தப் பெண் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்..
மற்றொரு பயனர் “அந்தப் பெண் முற்றிலும் தவறு செய்துள்ளார். நீங்கள் ஒரு இருக்கையில் துப்பட்டாவை வைப்பதால், அது உங்களுடையதாகிவிடுமா? அப்போதுகூட, அந்த ஆண் நிதானமாக இருந்தார்.. துஷ்பிரயோகம் செய்யப்பட்டு தாக்கப்பட்ட போதிலும், அவர் எதிர்வினையாற்றவில்லை,” என்று மற்றொரு பயனர் கூறினார்.
“ஒரு இருக்கையில் துப்பட்டாவை வைப்பது உங்களுடையதாகிவிடும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறதா?” என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் ஆந்திர அரசுப் பேருந்தில், இருக்கைக்காக பெண்கள் சண்டையிட்டுக் கொண்ட இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது..