United States | துப்பாக்கி இல்லாமல் என்கவுண்டர்.? 94 பேரை காவு வாங்கிய மயக்க ஊசி.!! பதற வைக்கும் அறிக்கை.!!

United States: கடந்த 2021 ஆம் வருடம் அமெரிக்காவை சேர்ந்த டிமெட்ரியோ ஜாக்சன் என்ற 43 வயது நபர் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். அதிகாரிகள் அவரை ஒரு டேசர் மூலம் ஷாக் கொடுத்தனர். அப்போது தன்னால் மூச்சு விட முடியவில்லை என ஜாக்சன் காவல்துறையிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பின்பக்கமாக கைகளில் விலங்கிடப்பட்டு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது.

பின்னர் ஜாக்சனுக்கு பின்புறமாக கை விலங்கிடப்பட்டு மருத்துவர்களின் மூலமாக சக்தி வாய்ந்த மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இது உங்களை அமைதிப்படுத்தப் போகிறது” என்று ஒரு அதிகாரி ஜாக்சனுக்கு உறுதியளித்தார். சில நிமிடங்களில் ஜாக்சனின் இதயம் நின்றுவிட்டது. அவர் சுயநினைவு திரும்பாமலேயே இரண்டு வாரங்கள் கழித்து உயிரிழந்தார்.

2021 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜாக்சனின் மரணம் காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிகளை பயன்படுத்தாமல் மருத்துவ சிரிஞ்ச் மூலம் மௌனமாக நிகழ்த்தும் என்கவுண்டர்களை சுட்டிக்காட்டுகிறது. மேலும் அவரது மரணம் அமெரிக்க(United States) காவல்துறையில் மறைந்திருக்கும் மர்மங்களை விளக்குகிறது.

காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு மயக்க மருந்துகளை வழங்கும் நடைமுறை கடந்த 15 ஆண்டுகளாக நாடு முழுவதும் அமைதியாக பரவியுள்ளது. இந்த மரணத்தின் மர்மங்களை அசோசியேட்டட் பிரஸ் தலைமையிலான விசாரணை கண்டறிந்துள்ளது. சட்ட அமலாக்கத்தின் ஆயிரக்கணக்கான பக்கங்கள் மருத்துவ பதிவுகள் மற்றும் இந்த சம்பவங்கள் தொடர்புடைய வீடியோ பதிவுகள் என பல ஆதாரங்களின் அடிப்படையில், வன்முறையைக் குறைப்பதற்கும் உயிரைக் காப்பாற்றுவதற்கும் ஒரு உத்தி எவ்வாறு தவிர்க்கப்படக்கூடிய மரணங்களுக்கு வழிவகுத்தது என்பதை விசாரணை காட்டுகிறது.

ஃபிரண்ட் லைன் மற்றும் ஹோவர்ட் சென்டர்ஸ் ஃபார் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம் ஆகியவை நடத்திய கண்டுபிடிப்புகளின் படி 2012 முதல் 2021 வரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மயக்க மருந்து கொடுக்கப்பட்டவர்களில் 94 பேர் இறந்துள்ளனர். விசாரணையின் போது நடைபெற்ற 1000 இறப்புகளில் இது 10 சதவீதம் ஆகும். இறந்த 94 நபர்களில் ஜாக்சன் உட்பட 50 சதவீதம் பேர் கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மயக்க மருந்தை கைதிகளின் மீது செலுத்தியது தொடர்பாக நிகழ்ந்த மரணங்களில் பாதிக்கும் ஏற்பட்ட சம்பவங்கள் புகார் அளிக்கப்படவில்லை. பொதுவாக இது போன்ற மரணங்களில் மருத்துவரின் மீது விசாரணை நடத்தப்படுவதில்லை. காவல்துறையினர் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது . எனினும் கடந்த 2019 ஆம் ஆண்டு கொலராடோவின் அரோராவில் நடைபெற்ற எலிஜா மெக்லைனின் மரணம் தொடர்பாக இரண்டு துணை மருத்துவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த கைது சம்பவத்தின் போது மெக்லைனுக்கு அதிக அளவு கெட்டமைனைக் கொடுத்ததற்காக இரண்டு துணை மருத்துவர்களும் தண்டிக்கப்பட்டனர்.

AP பரிசோதித்த 90% இறப்புகளில் பிரேத பரிசோதனையாளர்கள் மற்றும் மருத்துவ பரிசோதகர்கள் மயக்க மருந்தை இறப்பிற்கான காரணமாக பட்டியலிடவில்லை. மேலும் சில பிரேத பரிசோதனை அறிக்கைகள் இறந்தவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாக ஆவணப்படுத்த முடியவில்லை.

நிகழ்ந்த மரணங்களில் பெரும்பாலானவை தற்செயலான மரணங்களாகவே கருதப்படுகிறது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்களின் மரணத்திற்கு பெரும்பாலும் மெத் அல்லது கோகோயின் காரணமாக இருந்திருக்கிறது. இறந்தவர்களில் நான்கில் ஒரு பங்கினரின் மரணத்திற்கு எக்சைட்டட் டெலிரியம் காரணமாக அமைந்ததாக மருத்துவ பரிசோதனை தெரிவிக்கிறது.

மருத்துவப் பரிசோதகர்கள் மயக்க மருந்துகளை நோயாளிகளைக் கட்டுப்படுத்த பாதுகாப்பான சிகிச்சையாகக் கருதுகின்றனர், மேலும் கடுமையான பிழையின்றி அவற்றின் பயன்பாட்டைக் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று கனெக்டிகட்டின் தலைமை மருத்துவ பரிசோதகரும், தேசிய மருத்துவப் பரிசோதகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் ஜேம்ஸ் கில் கூறினார்.

போதை மருந்து குற்றங்களில் கைது செய்யப்பட்டவர்களை கட்டுப்படுத்துவதற்கு மயக்க மருந்துகள் பெரிதும் உதவி புரிவதாக துணை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போதை மருந்து பயன்படுத்தியவர்கள் கைது செய்யப்படும் போது நிகழும் வன்முறைகளை தடுப்பதற்கும் காவல்துறை அதிகாரிகளை பாதுகாப்பதற்கும் மயக்க மருந்து செலுத்தப்படுவதாக அவர்கள் கூறினர். ஏனெனில் போதை மறந்து பயன்படுத்துபவர்கள் சில நேரங்களில் சைக்கோ மன நிலையில் இருப்பார்கள். இதனால் அவர்களை கட்டுப்படுத்த மயக்கம் மருந்து செலுத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.

மயக்க மருந்துகளால் மரணம் நிகழ்வதை குறைப்பதற்காக துணை மருத்துவர்கள் தீவிரமான சீர்திருத்தங்களை உருவாக்கி வருகின்றனர். துணை மருத்துவரான எரிக் ஜெய்கர் ஹூக்செட்டில் உள்ள ஒரு தீயணைப்பு நிலையத்தில்ஜாக்சனின் மரணத்தை ஒரு பயிற்சிக் காட்சியாகப் பயன்படுத்தினார். டாக்டர்கள் ஜாக்சனை முழுமையாக மதிப்பீடு செய்யத் தவறிவிட்டனர் என்றும், ஊசி போடுவதற்கு முன்பு கண்காணிப்புக் கருவிகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாங்கள் பயிற்சியை மாற்றவில்லை என்றால், நெறிமுறைகளை மாற்றுவோம், அமைப்பை பாதுகாப்பானதாக மாற்ற தலைமையை மாற்றுவோம்,” என்று ஜெய்கர் கூறினார். மேலும் எதிர்காலத்தில் இது போன்ற மரணங்கள் நிகழாமல் இருக்க நாம் அனைவரும் பொறுப்பேற்போம் என்று தெரிவித்தார்.

Read More: வாட்டி வதைக்கும் கோடை வெயில்… குடிநீருக்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு! முதல்வர் அறிவிப்பு!

Next Post

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! தண்ணீர் பாட்டில் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Sat Apr 27 , 2024
வந்தே பாரத் மற்றும் சதாப்தி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தண்ணீர் பாட்டில் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் சென்னை சென்ட்ரல் – மைசூர் உள்பட பல முக்கிய நகரங்களுக்கு இடையே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் அதிவேகமாக செல்வதாலும், ஸ்டேஷன்களில் சில […]

You May Like