மக்களை காப்போம் தமிழத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரசாரத்தின் 3 ஆம் கட்டமாக இன்று கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை பேரவைத் தொகுதிகளில் சாலை வலம் மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்பரை மேற்கொண்டார். அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், பர்கூர் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் எதை முழுமையாக நிறைவேற்றியுள்ளது? நீட் தேர்வு ரத்து என்ன ஆனது? மகளிருக்கான உரிமைத் தொகை அனைவருக்கும் வழங்கப்பட்டதா?
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் பல நிறுத்தப்பட்டுவிட்டன. எங்கள் ஆட்சியின் சாதனைகளையும், உங்கள் ஆட்சியின் சாதனைகளையும் மக்கள் முன் வைத்து விவாதிக்க நீங்கள் தயாரா?” என்று முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு சாவல் விடுத்தார்.
அதிமுகவில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம். விவசாயி நானே முதலமைச்சர் ஆகினேன். அதிமுக- திமுக சாதனை குறித்து மேடை போட்டு பேசுவோமா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதிமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனா். திமுக என்ன செய்தாலும் மக்கள் அவர்களை ஏற்க மாட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பரப்பரையில் பேசினார்.
Read more: 15 நிமிடங்கள் சங்கு ஊதினால் சத்தமாக குறட்டை விடுவதைத் தடுக்கலாம்!. ஆய்வில் தகவல்!