தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வாகன ஓட்டிகளிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கிறதா? என்பதை காவல்துறையினர் கண்காணித்து வருவது வழக்கம். அப்படி கண்காணிக்கும் போது வாகன ஓட்டிகளிடம் சில காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இதே போல திருமங்கலம் போக்குவரத்து காவல்துறையினர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த லஞ்சத்தை அங்குள்ள போலீஸ் பூத் ஒன்றில் லஞ்சம்.பெறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக சரியான விசாரணை நடத்துவதற்கு போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சி சரத்கர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், அவர்கள் நடத்திய விசாரணையில் திருமங்கலம் போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ ஜெய்சங்கர், முதல் நிலை காவலர் பாலாஜி உள்ளிட்டவர் வாகன ஓட்டிகளிடம் வஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. பணியிட இணைக்கும் செய்து கூடுதல் காவல் ஆணையர் கபில்குமார் சி சரத்கர் உத்தரவு பிறப்பித்தார்.