அரசு, அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் சென்னையில் செப்டம்பர் 8-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
சென்னையில் அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்தக் முகாமில், ஆசிரியர்களுக்கு மாணவர்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் உயர்நிலை மாணவர்களுக்கான சிக்கலான கருத்துகளை எளிதாக்குவதற்கான வழிகள் போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயிற்சியில் ஆசிரியர்கள் பங்கேற்க ஏதுவாக உரிய நாள்களில் அவர்களை பணிவிடுப்பு செய்ய வேண்டும். இதுதவிர ஆசிரியர்களுக்கு தங்கும் வசதி சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயிற்சியில் பங்கேற்கவுள்ள ஆசிரியர்கள் தங்கள் பாடத்துக்கான புத்தகங்களை உடன் எடுத்து வர வேண்டும். இந்த தகவலை சார்ந்த ஆசிரியர்களுக்கு தெரியபடுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.