வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ராஜக்கல் கிராமம் கூத்தாண்டவர் நகரை சேர்ந்தவர் 48 வயதான விஜயகுமார். கார் டிரைவரான இவருக்கு, திண்டுக்கல் மாவட்டம் கணவாய்பட்டி கிராமத்தை சேர்ந்த 36 வயதான தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்த நிலையில், தற்போது இவர்களுக்கு 16 வயதான ஹரித்ராஸ்ரீ என்ற மகளும், 13 வயதான விஜயஸ்ரீ என்ற மகளும், 5 வயதான பத்ரிநாராயணன் என்ற மகனும் உள்ளனர்.
குடும்ப சூழல் காரணமாக, தனலட்சுமி பேரணாம்பட்டு டவுன் ஆமினா வீதியில் ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில், தனது மனைவி தனலட்சுமியை காணவில்லை என்று விஜயகுமார் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல், விஜயகுமார் வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, விஜயகுமார் வீட்டிற்க்கு விரைந்து வந்த குடியாத்தம் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீட்டு சமையலறை பரணில் தனலட்சுமி அரிசி சாக்குபையில் கட்டி, 2 கைகளின் மணிக்கட்டுகளின் நரம்புகள் அரிவாளால் அறுக்கப்பட்டு, கால்கள் இரண்டும் செல்போன் சார்ஜர் ஒயரால் கட்டப்பட்டு முகம் அழுகிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், விஜயகுமாரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், “தனலட்சுமிக்கும் சின்னவரிக்கம் கிராமத்தை சேர்ந்த 25 வயதான குமரேசன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறியுள்ளார். மேலும், வீட்டு வேலைக்காக பேரன்பட்டிக்கு சென்று வந்த தனலட்சுமி, மூன்று நாளைக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவதாகவும், தன் பிள்ளைகளுக்கு தினமும் உணவு தயாரித்து நான் தான் பள்ளிக்கு அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், தனலட்சுமியிடம் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கணவர் விஜயகுமார் பலமுறை கூறியபோதும் அவர் அதை பொருட்படுத்தவில்லை. மேலும், கடந்த 28-ந் தேதி கணவன் மனைவி இருவரும் உல்லாசமாக இருந்த போது தனலட்சுமி “நீ ஆம்பளையா” என்று கேட்டு விஜயகுமாரை அவமதித்துள்ளார். அன்று இரவு தனலட்சுமி தனது கள்ளக்காதலன் குமரேசன் உடன் சினிமாவுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அவரிடம் விஜயகுமார் இரவு நேரத்தில் எங்கு சென்றாய் என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது தனலட்சுமி நான் எனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்து விட்டு வந்தேன். நீ ஆம்பளையா என்று மீண்டும் கேட்டு அவமானப்படுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், தனது மனைவியை கொடூரமாக கொலை செய்து, அவரது சடலத்தை சமையலறை பரணில் போட்டுவிட்டு, அதன்மேல் பழைய பொருட்கள், ஸ்பீக்கர் பாக்ஸ், கயிறு போன்றவற்றை வைத்துள்ளார். மேலும், மறுநாள் காலை ஒன்றும் நடக்காதது போல், தனது பிள்ளைகளுக்கு சமையல் செய்து, சாப்பாடு கட்டி கொடுத்து பள்ளிக்கு அனுப்பியுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் தனது மனைவியை காணவில்லை என்று கூறியுள்ளார்.
விஜயகுமாரின் வாக்குமூலத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை கைது செய்து குடியாத்தம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் அவர்களது மூன்று குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியது வேதனை அளிக்கிறது.
Also Read: தினமும் பஸ்ஸில் பயணம் செய்கிறீர்களா? கவனம்! கவனக்குறைவால் வாலிபருக்கு நேர்ந்த சோகம்..


