மத்திய கிழக்கில் போர்நிறுத்தத்திற்கான முக்கிய புள்ளிகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையை ஈரான் திறக்க முடியவில்லை. ஏனெனில், அந்த நீர்வழியில் ஈரான் புதைத்த கண்ணிவெடிகள் அனைத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை, மேலும் அவற்றை அகற்றும் திறனும் ஈரானிடம் இல்லை என்று நியூயார்க் டைம்ஸ் (NYT) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.. ஈரானின் ஆதரவுடன் அல்லது ஆதரவின்றி அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகி உள்ளது..
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.. இதை தொடர்ந்து ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளைப் புதைக்க சிறிய படகுகளைப் பயன்படுத்தியது. ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் அச்சுறுத்தலுடன், ஹார்முஸில் கண்ணிவெடிகளைப் புதைத்தது, உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமான அந்த நீர்வழி வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையைக் குறைத்தது.
எனினும் ஈரான் கண்ணிவெடிகளை ‘முறைதவறி’ புதைத்ததாகவும், அவை எங்கு புதைக்கப்பட்டன என்பதைப் பதிவு செய்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.. மேலும் கண்ணிவெடிகளின் நிலை பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவை மிதந்திருக்கலாம் அல்லது நகர்ந்திருக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கண்ணி வெடிகளுடன் ஒப்பிடுகையில் கடல் கண்ணிவெடிகளை அகற்றுவது கடினம் என்றும், அமெரிக்க இராணுவத்திடம்கூட வலுவான கண்ணிவெடி அகற்றும் திறன்கள் இல்லை என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். ஈரான் புதைத்த கண்ணிவெடிகளைக் கூட விரைவாக அகற்றும் திறன் அந்நாட்டிடம் இல்லை, என்று நியூயார்க் டைம்ஸ் அறிக்கை கூறியது.
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தையில் ஹார்முஸ் இடம்பெறுமா?
இன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தையில் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பது இடம்பெற வாய்ப்புள்ளது. புதன்கிழமை அன்று, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கான ஈரானிய தூதுக்குழுவில் அங்கம் வகிக்கும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஈரானிய இராணுவத்துடன் ஒருங்கிணைந்து மற்றும் “தொழில்நுட்ப வரம்புகளைக் கருத்தில் கொண்டு”, இரண்டு வாரங்களுக்கு ஹோர்முஸ் வழியாக பாதுகாப்பான பயணம் சாத்தியமாகும் என்று கூறினார்.
கண்ணிவெடிகளைக் கண்டறிவதில் ஈரானின் இயலாமையை ஈரானிய வெளியுறவு அமைச்சரின் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக இருப்பினும், உலகளாவிய கச்சா எண்ணெயில் கிட்டத்தட்ட 20 சதவீதம் கடந்து செல்லும் ஹார்முஸில் பதிக்கப்பட்ட கண்ணிவெடிகளைக் காட்டும் ஒரு வரைபடத்தை ஈரான் சமீபத்தில் வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஹார்முஸ் விரைவில் திறக்கப்படும் என்ற தனது நம்பிக்கையை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். “இப்போது, அவர்கள் (ஈரானியர்கள்) இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாங்கள் வளைகுடாவைத் திறக்கப் போகிறோம்… ஆனால் அது திறக்கப்படும்,” என்று அமெரிக்க ஜனாதிபதி வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.
Read More : 1,800 கோடி..! அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவு..! ஹார்முஸ் வான்பரப்பில் மாயமான ட்ரோன்..! என்ன நடந்தது..?



