மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!! பணம் கொட்டப்போகுது..!!

மத்திய அரசு ஊழியர்கள் பல மாதங்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் சம்பள உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய இரண்டு தவணைகளுக்கான அகவிலைப்படி உயர்வுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு 2024 ஜனவரி 1ஆம் தேதிக்கான தவணைக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு மார்ச் 7ஆம் தேதி அன்று வெளியாகியது.

அரசு அறிவிப்பின்படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அறிவிப்பின்படி, மொத்தம் 50 சதவீத அகவிலைப் படியை மத்திய அரசு ஊழியர்கள் பெறுவார்கள். ஆனால், ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கான 3 மாத நிலுவைத் தொகை ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கிறது.

இந்த நிலுவை தொகையானது வரும் ஏப்ரல் மாத சம்பளத்துடன் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊழியர்கள் அடிப்படை சம்பளத்துடன் உயர்த்தப்பட்ட சம்பளத்தையும் பலனாக பெறுவார்கள்.

Read More : ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு சிக்கல்..!! புற்றுநோயால் பெண் மரணம்..!! கோர்ட் பரபரப்பு உத்தரவு..!!

Chella

Next Post

மே 1குரு பெயர்ச்சி: எந்தெந்த கோயில்களுக்கு செல்லலாம்?

Mon Apr 22 , 2024
குரு என்றால், இருட்டைப் போக்குபவர், கனமானவர் என்றும் பொருள்கள் உண்டு. குருவானவர் பெயர்ச்சி ஆவதைத்தான் ஜோதிடத்தில் குரு பெயர்ச்சி என்று சொல்கிறார்கள். குரு பெயர்ச்சி வரும் மே 1ஆம் தேதி நடைபெறுகிறது. குரு பெயர்ச்சியானது சில ராசியினரின் வாழ்வில் ஏற்றத்தையும், மாற்றத்தையும் தரும் என்பது பலரின் நம்பிக்கை . குரு பெயர்ச்சியையொட்டி எந்தெந்த கோயில்களுக்கு செல்லலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். பொதுவாக குரு பெயர்ச்சியின் போது சகல சிவாலயங்களிலும் சிறப்பு […]

You May Like