சென்னை திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன்(47). தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிவரஞ்சனி (43). வீட்டிலேயே துணி தைக்கும் தொழில் செய்து வந்தார். இந்த தம்பதிக்கு பிரணவ்(16) என்ற மகனும், ஜெயஹரிணி(9) என்ற மகளும் இருந்தனர். கீழ்த் தளத்தில் சீனிவாசனின் தாய் மைதிலி வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக சிவரஞ்சினியின் நடத்தையில் சீனிவாசனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று இரவு பணி முடித்து வந்த சீனிவாசன் மனைவி மற்றும் குழந்தை சிவரஞ்சினியுடன் தூங்க சென்றார். மகன் பிரணவ் பாட்டியுடன் கீழ் தளத்தில் தூங்கியுள்ளனர். அப்போது சீனிவாசனுக்கும் சிவரஞ்சினிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சீனிவாசன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சிவரஞ்சனியின் கழுத்தை அறுத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மகள் ஜெயஹரிணி, அலறித் துடித்துள்ளார்.
வெளியே தெரிந்துவிடும் என்ற பயத்தில் சீனிவாசன் தான் பெற்ற மகள் என்றும் பாராமல் ஜெயஹரிணியின் கழுத்தையும் கத்தியால் அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார். பிறகு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். அதன் பின்னர் தாய்க்கு போன் செய்த சீனிவாசன், இருவரையும் கொலை செய்து விட்டேன் எனக் கூறிவிட்டு போனை கட் செய்துள்ளார். இதைக் கேட்டு பதறிப் போன தாய் உடனே மாடிக்கு சென்று பார்த்தார்.
அங்கு இருவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திரு.வி.க நகர் போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த சீனிவாசனைப் போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: பாஜகவின் ‘A’ டீம் திமுக.. வாக்கைத் தக்க வைப்பதற்காக தான் இந்த நாடகம்..! – சீமான் தாக்கு



