சென்னை விபத்தில் அண்ணாமலைக்கு தொடர்பு உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; சென்னையில் எனது கார் மீது ஸ்கூட்டர் மோதியது குறித்து முந்திக்கொண்டு அண்ணாமலை விமர்சனம் செய்தது உள்நோக்கம் கொண்டது. ஸ்கூட்டர் மீது எனது வண்டி மோதியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து வெளியிட்டவருக்கும் அண்ணாமலைக்கும் ஏதோ தொடர்பு உள்ளது. அண்ணாமலைக்கு மட்டும் உடனடியாக செய்தி எப்படி தெரிகிறது.. […]

மெக்சிகோவில் இரட்டை அடுக்கு பேருந்து மீது ரயில் மோதிய கோர விபத்தில் 10 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மெக்சிகன் தலைநகரிலிருந்து வடமேற்கே சுமார் 80 மைல் (130 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள அட்லகோமுல்கோ நகரில் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரட்டை அடுக்கு பேருந்து மீது ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. ஹெர்ரதுரா டி பிளாட்டா வழித்தடத்தில் இருந்து சென்ற பேருந்து இந்த […]

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து மரண இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்துக்காக வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டு தொகை ரூ.1 லட்சம் என்பதை ரூ.2 லட்சம் என்றும், உடல் உறுப்பு இழப்பிற்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூ.20 ஆயிரம் என்பதை ரூ.1 லட்சம் என்றும், இயற்கை மரணத்துக்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூ.20 ஆயிரம் என்பதை ரூ.30 […]