திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் வாழ்க்கையை சில நொடிகளில் சிதைத்துள்ளது கேரளாவில் நடந்த கோர விபத்து. சாலையோரம் பைக்கை நிறுத்தி தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் 3 வயது மகன் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் மூவரும் உயிரிழந்தனர். திருச்சூர் மாவட்டம் குருவாயூர் – குன்னம்குளம் சாலையில் சனிக்கிழமை நள்ளிரவில் இந்த விபத்து நடந்தது. முனீர் (35), […]

மேற்கு ஈரானில் உள்ள சனந்தாஜ் மற்றும் ஹமேடான் மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில், சனிக்கிழமை நிகழ்ந்த விபத்து காரணமாக எரிபொருள் டேங்கர் லாரி ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர், மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. டேங்கர் லாரி வெடித்ததில் ஏற்பட்ட தீ, அருகிலிருந்த பல வாகனங்களுக்கும் பரவி சேதத்தை ஏற்படுத்தியது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சனந்தாஜ் நகரில் […]

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் 12 பேர், ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் பஜ்ரா அறுவடைப் பணிக்காக வேனில் சென்றுகொண்டிருந்தனர். வியாழக்கிழமை அதிகாலை குண்ட்லி–மானேசர்–பலவல் (KMP) விரைவுச்சாலையில், கற்கோடா அருகே IMT பகுதியில் அவர்கள் சென்ற ஈகோ வேன் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர். வியாழக்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. பிலிபிட் மாவட்டம் […]

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த ஆம்னிப் பேருந்து எதிர்திசையில் வந்த அரசுப் பேருந்தின் மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மதுரை கொட்டாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில், வேகமாக வந்த ஆம்னிப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் எதிர்புறம் பயணிகளை ஏற்றிச் […]

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே பேட்டை அருகே கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.. இந்த பள்ளியில் அரையாண்டு தேர்வு நடந்து வரும் நிலையில், தேர்வு முடிந்து உணவு இடைவேளையில் மாணவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர்.. இந்த நிலையில் நடைமேடைகளில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அந்த பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.. இந்த விபத்தில் 7-ம் வகுப்பு மாணவன் மோகித் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி […]