எலான் மஸ்க் மீண்டும் உலகளவில் விவாதத்தை ஏற்படுத்தும் வகையில், மனிதர்கள் வேலை செய்ய வேண்டிய காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். Zerodha இணை நிறுவனர் நிகில் காமத் நடத்தும் பாட்காஸ்டில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் சமூகத்தை முற்றிலும் மாற்றிவிடும், அந்த மாற்றத்தால் மக்கள் “வேலை செய்யவே வேண்டிய அவசியம் இருக்காது” என்று கூறினார்.. மேலும் “இன்னும் 20 ஆண்டுகளுக்குள்… நான் சொல்ல […]

ஸ்டார்ட்அப் நிறுவனர் மற்றும் உள்ளடக்க உருவாக்குநரான சோஹன் எம். ராய் தனது வயிறு முழங்கும் (growling) சத்தத்தை கண்டறிந்து தானாகவே உணவு ஆர்டர் செய்யும் ஒரு AI சாதனத்தை உருவாக்கியதாக கூறியுள்ளார்.. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர் “ நான் பசியாக இருக்கும்போது அதை புரிந்துகொண்டு தானாகவே Zomato-வில் உணவு ஆர்டர் செய்யும் சாதனத்தை கண்டுபிடித்திருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.. இது பெல்ட்டில் அணியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சாதனம் எப்படி வேலை […]

நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் உச்சமாக இன்று செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) பார்க்கப்படுகிறது. இன்று அனைத்துத் துறைகளிலும் பரவலாகப் பயன்படும் AI, சாதாரண பொதுமக்களின் அன்றாட வாழ்விலும் ஓர் அங்கமாகிவிட்டது. மனித வாழ்வின் முக்கிய அம்சமாக மாறிவிட்ட இந்த AI தொழில்நுட்பம், வரும் காலத்தில் நமது வாழ்க்கைத் தரத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம். மனித […]

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிரடி முன்னேற்றமாக, ஒரு ஆல்கோரிதம் சமீபத்தில் ஒரு விந்து மாதிரியின் 25 லட்சம் படங்களை 2 மணிநேரத்தில் ஸ்கேன் செய்து, உயிர் வாழும் இரண்டு விந்தணுக்களை (sperm cells) கண்டறிந்தது. இந்த கண்டுபிடிப்பு, 19 ஆண்டுகளாக குழந்தை பெற முடியாமல் தவித்த ஒரு தம்பதியருக்கு குழந்தை பிறக்க வழிவகுத்தது என்று The Lancet இதழ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த இந்த தம்பதியில், கணவன் 39 […]

நாடு முழுவதும் பள்ளிகளில் 3-ம் வகுப்பில் இருந்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாடம் அறிமுகம் செய்யப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் கணக்கீட்டு சிந்தனை (கம்ப்யூட்டேஷனல் திங்கிங்-சிடி) தொடர்பான பாடத்தை அறிமுகப்படுத்த மத்திய கல்வித்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ஏஐ மற்றும் சிடி பாடங்களை பள்ளிகளில் அறிமுகம் செய்வது தொடர்பாக ஆராய,சென்னை ஐஐடி பேராசிரியர் கார்த்திக் ராமன் தலைமையிலான நிபுணர்கள் […]

மூன்றாம் வகுப்பு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது . இது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் கல்வியின் அத்தியாவசியக் கூறுகளாக செயற்கை நுண்ணறிவு மற்றும் கணக்கீட்டு சிந்தனையை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தேசிய […]

செயற்கை நுண்ணறிவு (AI) நம் வாழ்க்கையில் நாளுக்கு நாள் பெரும் பங்கை வகிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பு ஆபத்துகள் குறித்து அச்சங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டின் ஆரம்பத்தில், Palisade Research வெளியிட்ட ஒரு அறிக்கையில் — பல முன்னேற்றமான AI மாடல்கள் தங்களை நிறுத்த முயன்றபோதும் அதனை எதிர்த்து செயல்பட்டதுடன், முடக்குவதற்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு முறைகளையே சில நேரங்களில் தாமே சிதைத்தன […]

உலக வேலைவாய்ப்பு சந்தை தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான டிஜிட்டல் யுகத்தால் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. நிறுவனங்கள் AI கருவிகள் மற்றும் ஆட்டோமேஷன் முறைகளைத் தீவிரமாக ஏற்றுக்கொள்வதன் விளைவாக, சந்தையில் புதிய திறன்களுக்கும், தொழில்முறை மறுவரையறைக்கும் தேவை அதிகரித்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 90 மில்லியன் (9 கோடி) வேலைகள் அழியும் அபாயம் உள்ளதாகவும், […]

AI தாக்கம் காரணமாக, இந்தியாவில் ஐ.டி., துறையில் பணிபுரியும் 20 லட்சம் பேரின் வேலைகள் பறிபோக வாய்ப்புள்ளதாக நிடி ஆயோக் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நிடி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமண்யம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் தற்போது ஐ.டி., துறையில் கிட்டத்தட்ட 80 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஏ.ஐ., தாக்கத்தால், 20 லட்சம் வேலைகள் பறிபோகக்கூடும். எனினும், பணிபுரிவோர் ஏ.ஐ., தொடர்பான […]