fbpx

மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகே போராட்டம் நிறுத்தப்படும் என டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடமாட்டோம் என தமிழக அரசு …

தேமுதிக, அதிமுகவை தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தலை பாஜக புறக்கணிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா கடந்த 2021ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர் திடீரென உயிரிழந்ததை அடுத்து 2023ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், அவருடைய தந்தையும், காங்கிரஸ் மூத்த நிர்வகியுமான …

தமிழக சுகாதாரத் துறையில் குறைந்தது வாரம் ஒரு உயிரைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மின்சாரம் தாக்கி, சிகிச்சைக்காக வந்த பாண்டித்துரை என்பவர் மருத்துவர் இல்லாததால் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு …

தங்கள் தவறுகளை மறைக்கவும், கள்ளச்சாராயத் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் திமுகவினரைப் பாதுகாக்கவும், திமுக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தால் 69 உயிர்கள் பலியான வழக்கு விசாரணையில், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளது. கள்ளக்குறிச்சி கல்வராயன் …

இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே ஆளுநர் பேரவையை விட்டு வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் கோபத்தைத் திசை திருப்ப ஆளுநர் மீது பழி சுமத்துவது திமுக அரசுக்கு வாடிக்கையாகி விட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” திமுக அரசு, தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்கவும், …

தமிழக பாஜகவுக்கு 15-ம் தேதிக்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பாஜக-வுக்கு புதிய மாநிலத் தலைவர் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தேசிய தலைமை, மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை நியமனம் செய்துள்ளது. கிஷன் ரெட்டி கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழக பொறுப்பாளராக இருந்தார். …

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் முழு உண்மையை வெளிக்கொணர வலியுறுத்தி பாஜக சார்பில் மதுரையில் இருந்து சென்னை வரை இன்று நடைபெறும் நீதிகேட்பு பேரணியில், பாஜக மகளிரணி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் …

நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்துக்கு தங்களது பங்களிப்பை தருவதாக கூறிய தனியார் பள்ளி சங்கத்துக்கு நன்றிதான் கூறினேன். இது தெரியாமல், அரசுப் பள்ளிகளை தத்துக்கொடுத்து விட்டதாக கண்டன அறிக்கை வெளியிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறி இருந்தார். இந்த நிலையில் அரசு சார்பில் …

கல்வித் துறைக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது என பாஜக மாநில தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நேற்றைய தினம் நடைபெற்ற, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் துவக்க விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றான, 500 அரசுப் பள்ளிகள், அவற்றின் அருகிலிருக்கும் தனியார் பள்ளிகளால் …

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.…