கோல்ட்ரிஃப் உள்பட 3 இருமல் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிப் சிரப் இருமல் மருந்துகளை உட்கொண்ட 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்த உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் ‘டை எத்திலீன் கிளைக்கால்’ எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில், நச்சுத் தன்மையுள்ள ரசாயனம் கலந்த ‘கோல்ட்ரிஃப்’ […]

மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும், “சென் பார்மா” மருந்து நிறுவனத்தின் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில்; மத்தியப் பிரதேச அரசிடம் இருந்து கடந்த 1-ம் தேதி கடிதம் வந்தது. மக்களின் உயிர்காக்கும் பிரச்சினை என்பதால் உடனடியாக, காஞ்சிபுரத்தில் செயல்படும் ‘சென் பார்மா’ நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, பேட்ச் 13-ல், தயாரிக்கப்பட்ட, கோல்ட்ரிப் […]

ஒவ்வொரு பெண்ணின் அலமாரியிலும் ஹை ஹீல்ஸ் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக உள்ளது. கிட்டத்தட்ட அனைவரும் அவற்றை அணிந்துகொள்வதை விரும்புகிறார்கள். இருப்பினும், நீங்கள் அமெரிக்காவில் உள்ள இந்த நகரத்திற்கு ஒரு பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், உங்கள் ஹீல்ஸை உங்களுடன் எடுத்துச் செல்வது பற்றி இருமுறை யோசிக்கலாம். இந்த குறிப்பிட்ட நகரத்திற்குள், 2 அங்குலம் அல்லது அதற்கு மேற்பட்ட உயரமுள்ள ஹீல்ஸ் அணிவதற்கு எதிராக சட்டப்பூர்வ தடை உள்ளது. இந்தக் கொள்கை அமெரிக்காவின் […]

கூல்ஸ்கல்ப்டிங் எனப்படும் எந்திரத்தைப் பயன்படுத்தி கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கும் சிகிச்சைகள் தொடர்பாக தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக விஎல்சிசி நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ 3 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டிருந்த உடல் எடைக் குறைப்பு விளம்பரம் புகார் மற்றும் விளம்பர கண்காணிப்பு மூலம் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு வந்தது. பரிசோதனையில், இந்நிறுவனம் , எடை இழப்பு பற்றிய மிகைப்படுத்தப்பட்ட அறிவிப்புகளை […]

என்ன உடை அணிய வேண்டும் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்.. ஆனால் இந்த நாட்டில் ஜீன்ஸ் அணிந்தால் சிறை தண்டனை கிடைக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை தான்.. வடகொரியாவில் நீல நிற ஜீன்ஸ் அணிவது ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. ஜீன்ஸ் அணிந்தால் அதற்கு தண்டனையாக மிகப்பெரிய அபராதம் விதிக்கப்படும்.. அல்லது சிறைத்தண்டனை கூட கிடைக்கும்.. வட கொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான […]

தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்சினை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்த சூழலில், டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால் யமுனை ஆற்றின் நீர், பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆபத்தானதாக மாறி வருவதாக பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். 24 மணி நேரத்தில் ஒருவர் 49 சிகரெட்கள் புகை பிடித்தால் எந்தளவுக்குப்பாதிப்பு ஏற்படுமோ, அதே அளவு […]

குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் நாட்டில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடற்கரைகள், பொதுத் தோட்டங்கள், பள்ளிகளுக்கு வெளியே உள்ள பகுதிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து நிறுத்தங்கள் போன்ற பரந்த அளவிலான வெளிப்புற இடங்களில் தடை உத்தரவு பொருந்தும். எனினும், கஃபே உள்ளிட்ட இடங்கள் புதிய விதிகளுக்கு […]