நாங்க யாருடன் வேணும்னாலும் கூட்டணி வைப்போம் என்றும் ஸ்டாலின் ஏன் நடுங்குகிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இப்போதே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த […]

அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப்போவதாக வெளிவரும் தகவல்கள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; திமுகவினர்தான் அடிமை மாடலும், பாசிச அரசியலும் செய்கிறார்கள். முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா பெண்களை கேவலமாக பேசுகிறார். பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. வகுப்பறையில் ப வடிவில் இருக்கைகள் இருக்க வேண்டும் என்பது என்ன அடிப்படையில் என்பது தெரியவில்லை. படிக்கும் மாணவர்களுக்கு […]

அதிமுக சார்பில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, கோவை வடவள்ளி பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசுகையில், கோயிலை கண்டாலே திமுகவுக்கு கண்ணு உறுத்துகிறது. அதிலிருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். இது எப்படி நியாயம், தெய்வபக்தி படைத்த மக்கள் எதற்காக கோயில் உண்டியலில் பணத்தை போடுகிறார்கள், கோவிலை மேம்படுத்ததானே.. ஆனால் அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரும் […]

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் சார்ந்த இந்து முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரமாண்டமான நிகழ்வில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது சமீபத்திய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டங்களில் ஒன்றாகும். சட்டமன்றத் தேர்தல்களுக்கு ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இந்த மாநாடு அரசியல் வட்டாரங்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. […]

சென்னை பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் செயற் குழுக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று பேசினார். இதையடுத்து செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய், “திமுக மற்றும் பாஜக உடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என்பதை உறுதியாக […]