சென்னை திருவொற்றியூரில் மழைநீரில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் உயிரிழந்ததற்கு ஆளும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து தனது சமூகவலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ சென்னை திருவொற்றியூர் பகுதியில் தேங்கிக் கிடந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து 17 வயது பள்ளி மாணவன் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உயிரிழந்த அம்மாணவனின் குடும்பத்தாருக்கும் […]

முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் பேசியதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில், மதுரையில் கடந்த 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. அம்மாநாட்டில் அரசியல், மதம், பொது அமைதிக்கு எதிராகப் பேசக்கூடாது என்பன உள்ளிட்ட 52 நிபந்தனைகளை, மாநகர காவல் துறை விதித்திருந்தது. […]

31 வருடங்கள் தமிழகத்தில் ஆட்சி புரிந்த, பொன் விழா கண்ட அதிமுகவை பாஜக மட்டும் அல்ல எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி ஆவேசமான உரையாற்றினார். அந்த உரையில், “அதிமுக முடிந்துவிடும்” என மு.க. ஸ்டாலின் பேசுவது வெறும் பகல் கனவு எனக்கூறி அவர் கடுமையாக தாக்கினர். “நாட்டை காக்க […]

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியின் தேசியப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த அண்ணாமலை அந்த பொறுப்பில் இருந்து சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் புதிய பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அண்ணாமலைக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், அண்ணாமலைக்கு கட்சியில் தேசிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கட்சி […]

முதலமைச்சரிடம் ஏன் யாரும் கூட்டணி பற்றி கேட்பதில்லை என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ எங்கள் பாஜகவை பொறுத்த வரை, அகில இந்திய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டி உள்ளது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அனைத்திந்திய அளவிலான ஆலோசனை நடைபெறும். அதனை பொறுத்து தான் விஜய தாரணிக்கு பொறுப்பு வழங்கப்படும்.” என்று கூறினார். மாநில நிர்வாகிகள் […]

வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய முழுவதும் வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட இருப்பதாக மத்திய அரசின் நீர்வளத்துறை தெரிவித்திருக்கிறது. நிலத்தடி நீரை பயன்படுத்தும் உழவர்கள் அனுபவித்து வரும் துயரங்களையும், நெருக்கடிகளையும் புரிந்து கொள்ளாமல் இப்படி ஒரு […]

எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஆங்கில நாள்தழுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் என்று மீண்டும் உறுதிபட தெரிவித்தார். அதிமுகவில் பிரிந்து சென்ற யாரையும் ஒன்றிணைக்கவில்லை என்றும், அவர்கள் கட்சி விவகாரத்தை அவர்களே பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டில் தேசிய […]

2026 தேர்தலில் பாமக பாஜக இடம்பெறும் கூட்டணியில் விசிக நிச்சயம் இடம்பெறாது என திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2026 சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுகள் சூடுபிடித்துள்ளன. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைக் கூட்டணியில் இணைக்க பாஜக தீவிரம் காட்டி வருவதாகத் தெரிகிறது. அதேநேரம், திமுக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற தகவல் பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக விசிக தலைவர் திருமாவளவன் […]

வரும் ஜூன் 27, 28-ம் தேதிகளில் ஐடி விங் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கீழடி விவகாரத்தில் தமிழக நலன் முக்கியமில்லை, பிரதமர் மோடியின் ஆதரவு போதும்’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கருதுவது போன்று உடம்பில் துணி இல்லாமல் தூங்கும் வகையில், திமுக ஐடி விங் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டது. இதைக் கண்டித்து அதிமுக முன்னாள் […]

RSS – BJP மாநாடுகளில் உட்கார நேரமிருக்கும் அதிமுகவினருக்கு நீட் ஊழல் குறித்து தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நாடு முழுவது நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், அதில் பல குளறுபடிகள் நடந்ததாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அந்த […]