பணிபுரிவோருக்கான சிறப்பு எம்.பி.ஏ. படிப்பில் சேர்வதற்கு ஐ.ஐ.டி. சென்னை விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. பணிபுரிவோருக்கான சிறப்பு எம்.பி.ஏ. படிப்பில் சேர்வதற்கு சென்னை ஐ.ஐ.டி.யின் மேலாண்மைதுறை விண்ணப்பங்களை வரவேற்கிறது. பணிபுரிவோர் இப்படிப்பில் சேரும் வகையில் மாற்று வார இறுதி நாட்களில் வகுப்புகள் நடைபெறும். 2 ஆண்டுகளைக் கொண்ட இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க 2025 அக்டோபர் 19-ம் தேதி கடைசி நாளாகும். ஆர்வமுடையவர்கள் https://doms.iitm.ac.in/admission/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு இளநிலை படிப்பில் […]

தமிழகத்தில் இன்று முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஒடிசா – சத்தீஸ்கர் […]

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு விடுமுறை. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பரில் காலாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 10-ம் தேதி […]

பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி 3,380 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி 26, 27, 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு […]

தமிழகத்தில் நீலகிரி, கோவை தேனி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய […]