தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: ‘வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 2 நாட்களில் தெற்கு சத்தீஸ்கருக்கு கடந்து செல்லக்கூடும். தென்னிந்திய […]

போதைப் பொருள் நடமாட்டத்தை, தமிழ்நாடு காவல் துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதிமுக ஆட்சியில்தான் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 52 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், ஏதாவது ஒரு புதிய திட்டம் கொண்டுவரப்பட்டதா? திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி […]

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்; வடக்கு ஆந்திர – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா மற்றும் அதையொட்டிய வடக்கு ஆந்திர […]

பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து திட்டத்தை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்: கடந்த 1989-ல் சட்டப்பேரவை உறுப்பினராக எனது முதல் உரையே மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பதுதான். அதை ஏற்று, அப்போதைய முதல்வர் கருணாநிதி செயல்படுத்திய திட்டம்தான் நாட்டுக்கே வழிகாட்டியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு பேருந்துகளை திமுக ஆட்சியில் இயக்கி […]

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில்; கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த கொலு கொண்டாட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்.தினமும் மாலை 4 முதல் 5 மணிவரை நடைபெறும் வழிபாடு […]

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வகுப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு ‘அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI)’ படிப்புகளை சென்னை ஐஐடி விரிவுபடுத்துகிறது. இந்த படிப்புகள் ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளையுடன் இணைந்து ஸ்வயம் பிளஸ் மூலம் ஆன்லைன் முறையில் வழங்கப்படுகின்றன. முன்னர் வழங்கப்பட்ட ஐந்து படிப்புகளுடன், ஆசிரியர்களுக்கான ஒரு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. 25 முதல் 45 மணி நேரம் வரை கால அளவு கொண்ட இந்தப் படிப்பு, இலவசமாக […]