fbpx

இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்ட திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 முதல் 2022 ம் …

நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷ சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த ஆளும் திமுக அரசு தவறிவிட்டது என்று எதிர்க்கட்சிகள் கடுமையான …

Justice Krishnakumar: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் நீதிபதி டி கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில், நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய், நீதிபதி சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் குழு கூட்டம் நேற்று …

அதிக விலைக்கு மதுபானம் விற்றால், ‘டாஸ்மாக்’ ஊழியர்களை, ‘சஸ்பெண்ட்’ செய்வதாக பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது., தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் செயலர் மோகன்ராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில், 5,408 சில்லரை மதுக்கடைகள் இயங்குகின்றன. இங்கு, 24,986 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

ஊழியர்களுக்கு குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. ஆனால், …

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமனம் செய்யப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது என அதிமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரை நியமித்து தமிழக அரசு …

விவாகரத்து வழக்கில் தம்பதியனரை நேரில் ஆஜராகும்படி குடும்பநல நீதிமன்றங்கள் நிர்பந்திக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ஒரு தம்பதியனர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். விசா பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அந்த தம்பதியனரால் சென்னை …

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 471 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வந்துள்ளார். அமலாக்கத் துறை அலுவலகத்தில் திங்கள், வெள்ளி ஆகிய 2 நாட்களும் அவர் கையெழுத்திட வேண்டும் என உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

அதன்படி, ஜாமீனில் கடந்த …

12-ம் வகுப்பு தேர்வை தனித்தேர்வராக எழுதியவருக்கும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற உரிமை உள்ளது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் கடந்த 2019-ஆம் நடத்திய குரூப் 1 தோ்வில் தொலை நிலைக் கல்வியில் தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு சலுகை வழங்கியது. இதனை தொலைநிலைக் கல்வியில் படித்தவர்களுக்கு …

சென்னையில் வீட்டு வாசலில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் அறிக்கை தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வாகனப்புகை தீராத பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனால், நீதிமன்றமே அவ்வபோது தலையிட்டு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. தமிழ்நாட்டில் தணிக்கை செய்வதற்காக வாகனப்புகை சோதனை மையங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. …

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மற்றாரு சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று இறுதி விசாரணையை நடத்துகிறது. எனவே மீண்டும் அவரது பதவி தப்புமா? பறிக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

1996 -2001 காலகட்டத்தில் திமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, தனது பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி 1.36 கோடி ரூபாய் சொத்து …