சென்னையில் முதல் கட்டமாக 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்களை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் தொடங்கி வைக்கிறார். இதன் சிறப்பம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், சென்னை மாநகராட்சி புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 50 குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மெரினா கடற்கரையில் தொடங்கி வைக்க உள்ளார். மக்கள் […]

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் பழங்குடி மக்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை கையில் ஏந்தி வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூகநிலை உயர்வுக்காக பல்வேறு முனைப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவது இன்று உலகத்தையே தாக்கம் செய்கிறது. இதற்கு நேரடியான சாட்சியாக, கிழக்கு ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் பழங்குடியின மக்கள், முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை தூக்கி வைத்து பாரம்பரிய நடனம் ஆடி […]

ஞானசேகரன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு காவல்துறை தான் காரணம் என மனசாட்சியின்றி பச்சை பொய்யை மு.க.ஸ்டாலின் கூறுகிறார் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காகத் தி.மு.க.வினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். […]