காவல்துறையினரால் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் மரணச் சுவடு மறையும் முன்னரே மீண்டும் அதே பாணியில் அடுத்த அப்பாவியின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் வலுவடையத் துவங்கியுள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில்; திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வனச்சரகர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியினர் கிராமத்தைச் […]

தமிழகம் முழுவதும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையிலான ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு திமுக அரசு அமைந்த பிறகு, ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நோக்குடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, தமிழகத்தை அனைத்து துறையிலும் முன்னேறிய மாநிலமாக உயர்த்திக் காட்டியுள்ளோம். அந்த வகையில், சுகாதாரத் துறை சார்பில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 […]

விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000., இன்னும் 30 நாட்களில் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என திமுக அறிவித்தது. பின்னர், 2023-ம் ஆண்டு ‘கலைஞர் மகளின் உரிமை தொகை திட்டம்’ என்ற பெயரில் திட்டம் தொடங்கப்பட்டது. இதை பெறுவதற்கும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில், நான்கு சக்கர வாகனம் (கார், ஜீப் போன்றவை) வைத்திருக்கும் குடும்பங்களைச் […]

வணிகர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, கடைகள் உரிமம் தொடர்பான தற்போதைய சட்டத்தை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படுவதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 2011-12ல் 85,649-ஆக இருந்த வணிக உரிமங்களின் எண்ணிக்கை, பழனிசாமி ஆட்சியில் 2020-21ல் 2,05,100 ஆக உயர்ந்தது. அதேபோல, 2011-12ல் ரூ.5.40 கோடியாக இருந்த உரிமக் கட்டணம் பழனிசாமி ஆட்சியில் ரூ.12.90 […]

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். தூத்துக்குடி விமான நிலையம் ரூ.381 கோடி செலவில், சர்வதேச தரத்துக்கு இணையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 1,350 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுதளம் தற்போது 3,115 மீட்டர் நீளமுள்ள ஓடுதளமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்த முடியும். ஜூலை 26-ஆம் தேதி தூத்துக்குடி வருகை தரும் நமது பிரதமர் […]

நாமக்கல்லில் நடந்தது கிட்னி திருட்டு அல்ல, முறைகேடு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதற்கு பாஜக முன்னாள் தலைவர் மாநில அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குராமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வறுமையில் இருக்கும் விசைத்தறி தொழிலாளர்களைக் குறி வைத்து அவர்களிடம் இருந்து சிறுநீரகத்தைப் பெற்று விற்பனை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக மருத்துவ திட்டப் பணிகள் இயக்குநர் வினித் […]