தெருநாயை கோடாரியால் வெட்டிக் கொன்ற நபர்; அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

fa1aec7c3685eda2dc7462a3155c99f76cf8ede6416a8f8c82c2b758cedc3921

வீட்டின் முன்பு குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தவர்களுக்கு அடுத்த சில நிமிடங்களில் நடந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கையில் கோடாரியுடன் வந்த நபர், அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்களை விரட்டியதுடன், ஒரு நாயை பிடித்து தாக்கிக் கொன்றுள்ளார். இதைத் தடுக்க முயன்றவர்களும் அவரது ஆவேசத்துக்கு ஆளாகியுள்ளனர்.


மத்தியப் பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

திங்கட்கிழமை மாலை 5.15 மணியளவில் நரேந்திர அகிர்வார் தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வெளியே இருந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ஹோமி ஜாதவ் கையில் கோடாரியுடன் தெருநாய்களை விரட்டிச் சென்றுள்ளார்.

அப்போது ஒரு நாயை பிடித்த அவர், கோடாரியால் தொடர்ந்து தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த அந்த நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதன் பின்னர் மற்றொரு நாயை நோக்கியும் அவர் சென்றுள்ளார். ஆனால், அந்த நாய் அவரது பிடியில் சிக்காமல் அங்கிருந்து ஓடி தப்பியது.

இந்த சம்பவத்தின் போது நரேந்திரனின் தம்பியின் மனைவியும் ஆபத்தில் சிக்கியுள்ளார். அவர் அருகே கோடாரி வீசப்பட்ட நிலையில், தாக்குதலில் சிக்காமல் வீட்டிற்குள் ஓடி தப்பியுள்ளார்.

இதையடுத்து நரேந்திரன் அந்த நபரிடம் சென்று சம்பவம் குறித்து கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதுடன், நரேந்திரனுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹோமி ஜாதவ் இதற்கு முன்பும் ஆயுதங்களுடன் அப்பகுதியில் சுற்றி பொதுமக்களை அச்சுறுத்தியதாக நரேந்திரன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹோமி ஜாதவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நாய் கொல்லப்பட்ட சம்பவம், மற்றொரு நாயை தாக்க முயன்றது மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் ஆகியவை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read: KYC Update பெயரில் புதிய மோசடி.. இந்த ஒரு தவறை மட்டும் செய்யாதீங்க!

Saranya

Next Post

ஓமன் கடற்பகுதியில் வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்திய மாலுமி பலி!. தொடரும் பதற்றம்!.

Thu Sep 24 , 2026
ஓமன் நாட்டு கடற்பகுதியில், இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருந்த ‘எம்.வி கேப் டாவ்’ (MV Cape Dao) என்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் மாலுமி உயிரிழந்துள்ளதாக ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. “இந்தத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று இந்திய தூதரகம் X தளத்தில் பதிவிட்டுள்ளது. இந்தக் […]
Indian killed Oman coast

You May Like