இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் முழுவதும் இரவு முழுவதும் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.. மேலும் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் வீடுகள் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த குறைந்தது 3 பேர் உயிரிழந்தனர்.. பிராக்தா கிராமத்தில் ஒரு வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் […]

ஹிமாசல பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 355 பேர் உயிரிழந்துள்ளனர்‌ என மாநில அவசரகால நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது. இமயமலையையொட்டிய ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பலத்த மழையால் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் நேரிட்டுள்ளன. அண்டை மாநிலமான பஞ்சாபும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹிமாசல பிரதேசத்தில் கடந்த ஜூன் 20-இல் இருந்து இதுவரை 45 மேகவெடிப்புகள், 95 பெருவெள்ளங்கள், 132 பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டு, […]

பல நாடுகளில் நிலநடுக்கங்கள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. ஒவ்வொரு மாதமும் உலகின் ஏதாவது ஒரு நாட்டில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்தியாவிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. ANI அறிக்கையின்படி, புதன்கிழமை (ஆகஸ்ட் 20) காலை இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக, 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பாகிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலத்தின் சம்பாவில் முதல் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் […]

இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பால் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கூட்டுறவு வங்கி மூழ்கியுள்ளது. இதனால், அடகு வைக்கப்பட்ட நகைகள், பணம், ஆவணங்கள் குறித்து வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். இமாச்சல பிரதேச மாநிலத்தை கனமழை புரட்டி போட்டது. கனமழை மட்டும் பெய்யவில்லை. மேகவெடிப்பு, நிலச்சரிவும் ஏற்பட்டது. குறிப்பாக மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. […]

இமாச்சல பிரதேசத்தில் ஹட்டி சமூகத்தினர் சமீபத்தில் பழங்குடியினராக அந்தஸ்து பெற்றனர். அங்குள்ள சுமார் 1,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட டிரான்ஸ்கிரி பகுதியில் 154 பஞ்சாயத்துகள் உள்ளன. இங்கு ஹட்டி சமூகத்தினரை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். மிகவும் ஏழ்மையில் தவிக்கும் இப்பகுதியை சேர்ந்த சில பெண்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களை திருமணம் செய்து வாழ்க்கை நடத்துவதாக வினோத தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கு ஹட்டி சமூகத்தினரை […]

இமாச்சலப் பிரதேசத்தில் 2023-ம் ஆண்டு நிகழ்ந்த வெள்ளம், நிலச்சரிவு, பெருமழை சம்பவங்களுக்குப் பிறகு மீட்பு, மறுசீரமைப்புத் திட்டத்திற்காக மத்திய அரசின் உதவியாக ரூ. 2006.40 கோடி வழங்குவதற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் மற்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு, தேசிய பேரிடர் மீட்பு நிதியின் கீழ் மீட்பு […]