நாட்டில் மொத்தம் 1,78,184 ஆயுஷ்மான் சுகாதார மையங்கள் செயல்பாட்டில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மையங்கள் மூலம் சுகாதார பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் வகையில், ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார மையங்களில் விரிவான சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நோய்த் தடுப்பு முறைகள், தொற்று மற்றும் தொற்றாத நோய்களுக்கான சிகிச்சைகள், குழந்தைகள் நலன் மற்றும் இதர சுகாதார சேவைகளும் இந்த மையங்களில் வழங்கப்படும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. […]

தமிழ்நாட்டில் தொழிலாளர்களுக்காக 11 இஎஸ்ஐ மருத்துவமனைகள் செயல்படுகின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் (இஎஸ்ஐசி), சமூகப் பாதுகாப்பை வழங்குகிறது. இந்த தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் இஎஸ்ஐ சட்டம், 1948-ல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, மாதத்திற்கு ரூ.21000/- வரை (மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000/-) ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மற்றும் […]

இஎஸ்ஐ-யில் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை பதிவு செய்ய எளிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை பதிவு செய்ய ஊக்குவிக்கும் திட்டம் 2025 என்பது இஎஸ்ஐ சட்டத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பு காப்பீட்டை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறப்பு முயற்சியாகும். 2025 ஜூலை 1 அன்று தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும். இதன்படி உரிமையாளர்கள் தங்களது […]

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரத்தில், பயற்சி மருத்துவர் சிகிச்சை அளித்த காரணத்தினால்தான் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முத்தக்கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி யோகப்பிரியா பிரசவத்திற்காக, கரூர் அரசு மருத்துவமனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரசவத்திற்கு பின் கர்பப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பின் அடுத்த, இரண்டு தினங்களில் யோகப்பிரியா உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், நீதி […]

மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்ட மருத்துவ மனையில் 18 வயதான நர்சிங் மாணவி காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. சந்தியா சவுத்ரி என்ற அந்த பெண் வழக்கம் போல் நேற்று மருத்துவமனையில் பணி செய்து வந்தார். அப்போது அங்கு வந்த இளைஞன் மாணவியை சரமாரியாக தாக்கினார். மருத்துவமனையில் மருத்துவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் இருந்த போதிலும் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அந்த […]

143 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில், பிறப்புச் சான்றிதழ் என்பது ஒரு குழந்தையின் அடையாளம், குடியுரிமை, கல்வி மற்றும் அரசு சேவைகள் போன்றவற்றிற்கான முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. இந்நிலையில், இந்தியாவின் பதிவாளர் ஜெனரல் (RGI) ஒரு முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளார். ஜூன் 12, 2025 தேதியிட்ட ஒரு அதிகாரப்பூர்வ கடிதத்தில், RGI அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி: “புதிய குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்யும் நடவடிக்கையை மருத்துவமனையில் இருந்தபடியே முடிக்க, […]